பல வருடங்களுக்கு பின், மறு ரிலீஸாக வரப் போகிறதாம் இந்த காவியம்.
வருகிற 2023 மார்ச் மாதம்.
உண்மையா இல்லையா என தெரிந்தவர்கள் சொல்லலாம்.
காதலுக்கு ஏது வயது? உடலுக்கு தானே வயதே தவிர, மனதுக்கு ஏது வயசு?, அது என்றும் இளமை தானே?. அந்த இளமைதான் வயதானாலும் முகத்தில் தெரியும்.
இதை தெள்ளத்தெளிவாக சிவாஜி கணேசன் & ராதா மூலம் சொல்லியிருப்பார் பாரதிராஜா.
இவர் இயக்கிய உருப்படியான படங்களில் பெஸ்ட் மூவி.
ஆள்தான் பெரியவரே தவிர, குழந்தைத்தனமான நடிப்பை இந்த படத்தில் சிவாஜியிடம் காணலாம்.அதுவும் ராதாவுடன் இவர் தோன்றும் காட்சிகள் மகிழ்ச்சியாகவும், வடிவுக்கரசியுடன் வரும் காட்சிகள் மூஞ்சி டல்லாகவும் இருவேறு விதமான பாவனையில் அசத்தியிருப்பார்.
ஊர் பெரியவராக சிவாஜி,
வறண்ட பாலைவனமாக இருந்தவரின் மனதில் பூந்தென்றலாக வர
பிழைக்க வரும் நாடோடியாக ராதா.
அன்பு என்ற ஒற்றைச் சொல், வயது வித்தியாசம் பாராமல் இருவர் மனங்களையும் இணைக்க,
ஊர் என்ன சொல்லும்?,
உறவு என்ன சொல்லும்?,
என்பதை தாண்டி இவர்கள் காதல் ஒன்று சேர்ந்ததா? இல்லையா?.
இந்த படத்தை சீன் பை சீனாக விவரித்தால் இந்த பதிவு போறாது. அவ்வளவு விசியம் உள்ளது ரசிக்க.
No comments:
Post a Comment