Wednesday, February 22, 2023

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் . . .

 

1. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், இறந்த அவர்களுடைய கட்சி உறுப்பினருக்குப் பதிலாக, அவர்களுடைய கட்சியில் இருந்தே இன்னொருவர் அந்த இடத்தை நிரப்பப் போகிறார். ஆகவே, அதனால் அவர்களுக்கு லாபம் ஒன்றும் இல்லை. தோற்றாலும், அவர்களுக்கு அது ஒரு இழப்பைத் தரப் போவதில்லை. என்ன, அவர்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 17-ல் இருந்து, 16 ஆகக் குறையும். அவ்வளவு தானே?

2. காங்கிரஸ் வென்றாலும், தி.மு.கவுக்கு அதன் மூலம் பலன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. காங்கிரஸ் தோல்வியால், தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து வரப் போவதில்லை.

3. அ.தி.மு.க. வென்றால், சட்டமன்றத்தில் அதன் பலம் 66-ல் இருந்து, 67 ஆக உயரும். ஆனால் அதன் வெற்றி, கடந்த 21 மாதங்களாக வளர்ந்து வரும் மக்களின் அதிருப்தியை அது வெளிப்படுத்தும். அது, ஆட்சியில் இருக்கும் தி.மு.கவுக்குப் பாடமாக விளங்கும்.

4. வேறு எந்தக் கட்சியும் இத்தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை. ஆகையால், அதைப் பற்றிப் பேச எதுவுமில்லை.

பின் எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...