Wednesday, February 8, 2023

இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை.

 இந்த பாராளுமன்ற கூட்ட தொடரில் ஒருவர் கூட ஜனாதிபதி உரை

பற்றி குறிப்பிடவில்லை. 

இதற்கு பின்னால் உள்ள

காரணத்தை மக்கள் புரிந்து 

கொண்டனர். 


ஆனால், ஜனாதிபதி உரையை அனைவரும் ஏற்று கொண்டனர். ஜனாதிபதி உரையை சிலர் புறக்கணித்தனர். பெரிய தலைவர் ஒருவர் ஜனாதிபதியை அவமதித்தார். 

இது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 

எதிரான மனநிலையை

காட்டுகிறது. 


நேற்று முழக்கமிட்டு மகிழ்ச்சியை

வெளிப்படுத்திய எம்.பி.,க்களில் பலர் அவைக்கு வரவில்லை. ஐ.மு., கூட்டணி 

ஒவ்வொரு வாய்ப்புகளையும் 

பிரச்னையாக மாற்றியது. 


நாட்டில் பெரும்பான்மையான ஊழல், கடந்த 2004 முதல் 2014 வரையே நடந்தது. அது ஊழலுக்கான சகாப்தமாக 

இருந்தது. 


காமன்வெல்த் போட்டிகளில் நடந்த

ஊழல் காரணமாக நமது வீரர்களால் சாதனை படைக்க முடியவில்லை


பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் சிலர் ரிசர்வ் வங்கி குறித்து 

குற்றம் சாட்டுகின்றனர். 


ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக அரசு நிறுவனங்கள் 

அவமானப்படுத்தப்பட்டன. 


துணிச்சலுடன் இருந்ததற்காக 

பாதுகாப்பு படைகள் மீது அவதூறு பரப்பப்பட்டன.


நீதிமன்ற தீர்ப்புகள் சாதகமாக இல்லாத போது நீதிமன்றங்களையும் அவதூறு 

செய்தனர். 


தேர்தலில் தோற்ற போது தேர்தல் ஆணையத்தையும், மின்னணு 

ஓட்டுப்பதிவு இயந்திரத்தையும் 

அவதூறு செய்தனர். 


எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் 

பசையாக அமலாக்கத்துறை

உள்ளது. இதற்காக அந்த

அமைப்புக்கு எதிர்க்கட்சிகள் 

நன்றி தெரிவிக்க வேண்டும்.


வருங்காலத்தில் காங்கிரசின் வீழ்ச்சி குறித்து ஹார்வர்டு பல்கலை ஆய்வு செய்யும். 


நாடு வளர்ந்து வரும் நேரத்தில் பிற 

நாடுகளை தாழ்த்தி பேசுவதாக 

சிலர் புகார் கூறுகின்றனர். 

வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி 

அடையாதவர்கள், தங்களை

சுயபரிசோதனை செய்ய வேண்டும்


எனது ஒட்டு மொத்த வாழ்க்கையையும் 

நாட்டிற்காகவும், நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் 

அர்ப்பணித்துள்ளேன். 


விமர்சனங்களில் இருந்து என்னை காக்கும் கவசமாக மக்களின் ஆதரவே

இருந்தது. 


மோடி மீது மக்கள் வைத்திருக்கும் 

நம்பிக்கை எதிர்க்கட்சிகளின் 

புரிதலுக்கு அப்பாற்பட்டது. 


எதிர்க்கட்சிகளின்ஆட்சியில் 

காஷ்மீரின் லால்சவுக்கில் இதற்கு முன்னர் யாரும் தேசியக்கொடி 

ஏற்றியதில்லை. தற்போது 

காஷ்மீருக்கு சென்ற நீங்கள் 

எவ்வளவு உலா வந்தீர்கள் 

என்பதை நீங்களே அறிந்து 

கொள்வீர்கள். 


தங்களின் குடும்பத்திற்காக சிலர் 

நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட செய்தனர். எதிர்க்கட்சிகளின் விமர்சன அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள்


முன்னர் இந்தியா உலகத்தை

நம்பியிருந்தது. ஆனால், தற்போது, இந்தியாவைஉலகம் நம்பி இருக்கும் காலம் வந்துள்ளது.


கோவிட், போர் அச்சத்திற்கு இடையே

நாட்டை சிறப்பாக நிர்வகித்து 

வருகிறோம். சவால் இல்லாமல் 

எந்த வாழ்க்கையும் இல்லை. 


உலகின் 5வது மிகப்பெரிய 

பொருளாதாரமாக இந்தியா

மாறியுள்ளது. 


அண்டை நாடுகளில் பொருளாதார 

வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா முன்னேறி வருகிறது. இந்த அரசின் 

சாதனை, இந்திய மக்களை

பெருமையில் ஆழ்த்தி உள்ளது.


இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...