மனைவி; ஏங்க அவங்கெல்லாம் வந்தூட்டு போனாங்களே என்ன முடிவு எடுத்தீங்க?
கணவன்; அடியே எலக்ஷணுக்கு இன்னும் வள்ளிசா அஞ்சு நாள் இருக்கு. பாப்போம் எதிர்கட்சி நமக்கு இந்த ட்ரிப் என்ன குடுக்குதுன்னு. யார் ஜாஸ்தி கவனிக்கிறாங்களோ அவங்களுக்கு தான் போடறதுன்னு முடிவு பண்ணீட்டேன்!
மனைவி; ஏங்க வந்தவங்க ஒண்ணும் இளிச்சவாயங்க இல்ல. காலம் காலமா நம்ம ஓட்டு யாருக்கு போகுதுன்னு தெரியாமலா வராங்க? நீங்க வேணா பாருங்க. அந்த கட்சி வெறும் நோடீஸ் மாத்திரம் குடுக்கும். அதான் வாக்காளர் பட்டியல அக்கு வேற ஆணி வேறன்னு ஆராய்ச்சி பண்ணி தான் அவங்க நம்ம கவனிப்பாங்க. இது எல்லா கட்சிக்கும் பொது தான். வேலையில்லாம ஆத்துல கொளத்துல கொண்டு போடமாட்டாங்க!
கணவன்; சரி வெறுப்பேத்தாத நீ யாருக்கு வேணா பொடு. நான் அவங்க ஆள பாத்து 'இதப்பாருங்க அவிங்க இம்புட்டு கொடுத்தாங்க. நீங்க அதவிட ஒரு 100 ரூபா கூட கொடுத்தா நான் கேரன்டியா ஒங்க ஆளுக்கே போடுவேன்.
பூத் கமிட்டி ஆள்; அண்ணே தலைவரை கண்டுகினு நான் விடியகாலைல ஒங்களை பாக்குறேன். அந்த நாலாம் நம்பர் வீடு தான?
கணவன்; ஆமாம்பா ஆமாம். அப்புறம் வருத்தப்படாதீங்க!
அவர் போனதும் பூத் கமிட்டி; அண்ணே இத போல மதில் மேல் இருக்கிற கேசை கண்டிப்பா கவனிப்போம். இது போல ஒண்ணு ஒண்ணா சேந்தாலும் நமக்கு நல்லது தானே?
No comments:
Post a Comment