திருமணம் வித்தியாசமான வியாபாரம் பெண்ணை கொடுப்பவரே செல்வங்களையும் கொடுக்கின்றனர்.
வரமாய் கிடைக்கும் வாழ்க்கைக்கு
மருமகளை மகளாய் எண்ணாமல்
எதிரியாய் நினைத்து அவளையும்
அவள் குடும்பத்தையும் மட்டமாய் பேசி தினமும் அவளை கண்ணீர்
சிந்த வைக்கும் மாமியார் ஒரு வெங்காயமும் சேர்ந்த கலவையே
வதட்சணை வரமாய் கிடைப்பது என்றாலும் அது இன்று பல பெண்களுக்கும் உயிரை எடுக்கும் சாபமாய் உள்ளது .இன்று பல ஆண்கள் தாமதமாய் கல்யாணம் பண்ண சொல்லும் காரணம் அப்போது தான் வரதட்சனை அதிகமாய் வாங்க முடியும் என்று
சொல்லிகொள்கிறார்கள் பெருமையாய்.
வீடு வேண்டுமாம் நிலம் வேண்டுமாம் , கார் வேண்டுமாம் நகை வேண்டுமாம் , பாத்திர பண்டம் வேண்டுமாம் , பைக் வேண்டுமாம் மொத்த சொத்தே வேண்டுமாம்.
ஆனால் அந்த பெண்ணின் அன்பு மட்டும் வேண்டாமம் அவள் வேலைகாரியாய் மாறவேண்டுமாம்
இவ்வளவு கொடுத்ததும் அவளுக்கு நிம்மதியில்லாத வாழ்க்கை தான் பரிசாய் கிடைத்தது அதுவும் தரிசாய் போனது.
இன்று நல்ல வாழ்கை அமைவது
பலருக்கு என்றாலும் ஒரு சில
பூக்கள் கருகி போகிறது இப்படிபட்ட
சாப வாழ்க்கையில் மாட்டிக்கொண்டு
என்று அடங்குமோ இந்த வரதட்சணை என்ற கொடூர ஆட்டம்
காரத்தையும் கசப்பையும்
சந்திக்கும் பெண்கள் என்று இனிப்பை அனுபவிபார்களோ அனைத்தும் மாறி அவர்கள் தித்திப்பான வாழ்க்கை வாழ கடவுளை வேண்டுகிறேன் நான்.
No comments:
Post a Comment