Thursday, February 23, 2023

ஒரு பொருளுக்கு இரு முறை விலை கொடுக்க வேண்டியதில்லை...

 ஒரு முறை என் #தாத்தாவுடன் நடந்து செல்லும்போது, நான் விழுந்துவிடுவேன் என்று என் கைகளை பிடிக்க முயன்றார். நான் அவரிடம் கூறினேன், "எப்போதும் நீங்கள் என்னுடன் இருப்பதற்கு உத்தரவாதம் அளித்தால் , நான் நீங்கள் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறேன்." என்றேன். அவர் மிகவும் உண்மையான மனிதர். “என்னால் அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது . நாளைய தினத்தைப்பற்றிக் கூட என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஒன்று மட்டும் உறுதி. நீ நீண்ட காலம் வாழ்வாய் . நான் சீக்கிரம் செத்துப் போவேன். உன் கையைப் பிடிக்க நான் என்றென்றும் இங்கே இருந்து கொண்டிருக்க முடியாது” என்றார் .

“அப்படியானால் , என்னைக் கற்றுக் கொள்ள அனுமதியுங்கள். ஒருநாள் நீங்கள் நட்ட நடுவில் என்னை விட்டுப்போய்விடுவீர்கள். அதனால், தடுமாறி விழ , என்னை விட்டு விடுங்கள். நானே முயன்று மேலெழுகிறேன். காத்திருங்கள். கவனியுங்கள். என் கையைப் பிடிப்பதை விட அதுதான் நீங்கள் என் மீது அதிகம் பரிவு காட்டுவதாக அமையும்" என்று சொன்னேன் . அவர் என்னைப் புரிந்து கொண்டார் . “ நீ சொன்னது சரிதான் ஒருநாள் நான் இங்கு இல்லாமல் போய்விடுவேன்" என்றார்.
சில சமயம் , தடுக்கி விழுவதும் , காயம் படுவதும் , மறுபடியும் எழுவதும்,வழி தவறிப் போவதும் கூட நல்லதுதான். அதில் கெடுதல் ஒன்றும் இல்லை . வழி தவறிப் போய் விட்டதாக நினைக்கும் தருணம் வரும்போது , உடனே பழைய பாதைக்குத் திரும்பி விடப் போகிறோம் . தவறுகள் செய்து திருந்தக்கற்றுக்கொள்ள வேண்டியது வாழ்க்கை. நான் என் தந்தையிடம் இப்படிச் சொல்வதுண்டு. “எனக்கு உபதேசம் செய்யாதீர்கள் ; நான் கேட்டாலும் கூட. நீங்கள் இதில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்." , " உன் சொந்த வழியை நீயே கண்டுகொள்." என்று நீங்கள் சொல்லிவிட வேண்டும், உபதேசம் வேண்டாம்." ஏனென்றால் , மலிவாக அறிவுரைகள் கிடைத்து விட்டால் , யார் சொந்த வழி காண முயற்சி செய்வார்கள்?
என் ஆசிரியர்களிடமும் இதைத்தான் தொடர்ந்து சொல்லி வந்தேன். "ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். உங்களது ஞானம் எனக்குத் தேவையில்லை,பாடத்தை மட்டும் நடத்துங்கள். நீங்கள் நிலநூல் ஆசிரியர், ஏன் எனக்கு ஒழுக்கம் பற்றிப் போதிக்கிறீர்கள். நிலநூலுக்கும்,ஒழுக்கத்திற்கும் என்ன தொடர்பு?" என்பேன். மேலும் “என் வாழ்வை என் சொந்த வழியில் ஆராய்ந்து கொள்கிறேன். என் தவறுகளை நான் ஒப்புக்கொள்கிறேன். தப்புத்தவறுகளை நான் செய்யவே விரும்புகிறேன். கற்றுக்கொள்வதற்கு அது ஒன்றுதான் வழி.” என்று சொல்லிவிடுவேன்.
ஓஷோ
மறைஞானியின் சுயசரிதை
May be an image of outdoors
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...