'மேடம் ஜெயலலிதா' அவர்கள் 'முதல்வராக' இருந்த போது, ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கான நேர்க்காணலில்,
'சினிமா, அரசியல் இரண்டில் எந்தத் துறையை நீங்கள் மிகவும் நேசிக்கிறிர்கள் ?' என்ற கேள்விக்கு, 'இரண்டுமல்ல... எனக்கு விருப்பமில்லாமல், காலத்தின் சூழலால், இந்த இரண்டுக்குள்ளும் பிரவேசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.' என்றார். 'அப்படியானால், நீங்கள் எந்த மாதிரியான வாழ்வை விரும்புனீர்கள் ?' என்ற போது, 'ஒரு சாதாரண குடும்பப் பெண் போன்ற வாழ்வைத்தான் நான் விரும்பினேன்.' என்று பதிலளித்திருந்தார்.
அப்போது, என் நினைவுக்கு வந்த ஒரு பாடல் காட்சி,
'ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப் பொழுது... நல் காலைப் பொழுது...
மன்னன் இட்ட தாலி... பொன் வேலி
மானம் என்னும் வேலி... தன் வேலி
குலமகள் அவள் கோலம் குங்குமச் சிலையாகும்
நாயகன் கைகளில் நாயகி ஆடிடும்,
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப் பொழுது... நல் காலைப் பொழுது'
... என்ற, சுமதி என் சுந்தரி' ( இயக்குனர் : சி.வி. ராஜேந்திரன். 1971 ) படத்தில் இடம் பெறும் முதல் காட்சி் பாடல்தான்.
கதையின் நாயகியாக வரும் ஜெயலலிதா அவர்கள், அதிலும் ஒரு பிரபலமான நடிகையாக இருப்பார். பிரபலங்களின் வாழ்வில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபட்டு ஒரு சாதாரண பெண்ணாக வாழ விரும்புபவராக இருப்பார்.
ஒரு நாள் காலை வேளையில், காய்கறி வாங்க கடை விதிக்குச் செல்லும் அவரை, சுற்றிச் சூழும் ரசிகர்கள் கூட்டத்திலிருந்து விடுவித்து அழைத்து வரும் தன் காரியதரிசியிடம், 'என்னால் ஒரு சராசரிப் பெண் போன்ற வாழ்வை வாழ முடியாதா ?' என்று அங்கலாய்ப்புடன் கேட்பார்.
பின்னாளில், அது போன்ற ஒரு சூழல் ஏற்படுகிறது. படப் பிடிப்புக்காக, வெளியூர் செல்லும் வேளையில், தனிமையைத் தவிர்த்து, தனது படக் குழுவுடன் இணைந்து கொள்வதற்காக, ரயிலில் இருந்து இறங்கி, அடுத்தப் பெட்டிக்குள் ஏறுவதற்காக நடந்து செல்லும் வேளையில், ரயில் கிளம்பி விடுகிறது.
ரயிலைத் தவிர விட்ட அந்த இரவு நேரத்தில், அந்தத் தொலைதூரத் தேயிலைத் தோட்டத்தில், ஒரு தனி பங்களாவில், மிகவும் எதார்த்தமான, வெள்ளையுள்ளம் கொண்ட நாயகனை (நடிகர் திலகம்) சந்திக்கிறார். அதற்குப் பின், அவர் வாழ்வில் நடப்ப்தெல்லாம், அவர் விரும்பியபடியே, ஒரு சாதாரண, நிறைவான வாழ்வாக அமைகிறது.
இந்தப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம், திரையுலகிலும்... அரசியலுலகிலும்... மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவரின் வாழ்வில், இப்படி ஒரு ஏக்கம் இருந்திருப்பதாகவே தோன்றும் !
இரும்பு பெண் மணி ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாள்...
அம்மா என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்... I love u, amma
திரைப்பட நடிகையாக வலம் வந்து, ஐந்து முறை தமிழக முதல்வராக சாதனை புரிந்த மிகவும் தைரியம் நிறைந்த பெண்மணி செல்வி.J.ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாள் இன்று பிப்ரவரி 24,2023.
இந்திய முழுவதும் அனைவரின் கவனத்தையும் மனதிலும் நிறைந்தவர் என்றால் மிகையாகாது.
No comments:
Post a Comment