Thursday, February 9, 2023

குருவார_சங்கடஹர_சதுர்த்தி #சங்கடம்_தீரும்_சந்தோஷம்_கூடும்.*

 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🙏 சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை வர சதுர்த்தி என்றும், கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் கூறுவார்கள்.
🌼
🙏 ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
🌼
🙏 வியாழக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை குருவார சதுர்த்தி என்று அழைக்கின்றனர்.
🌼
🙏 குருவார சங்கடஹர சதுர்த்தி என்பது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம். மாலையில், அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்று ஆனைமுகனைத் தரிசிப்பது நன்மை பயக்கும்.
🌼
🙏 இந்த நாளில், அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று, அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். விநாயகருக்கு வஸ்திரமும், அருகம்புல் மாலையும், வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.
🌼
🙏 சங்கடஹர சதுர்த்தி நாளில், ஆனைமுகனைத் தரிசித்து வேண்டிக்கொண்டால், கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாது போகும். வாழ்வில் உயர்வு அனைத்தும் தந்தருள்வார். காரியத்தடைகள் விலகும். நினைத்ததை எல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் ஆனைமுகத்தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...