Tuesday, February 21, 2023

இவ்வளவு சிதிலமடைந்த கோவில் பாகிஸ்தான் பங்களாதேஷ் நாட்டில் இல்லை.

 நம்ம தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில்

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள நாச்சியார்கோயில் வழியாக, அரசலாற்றங்கரைக்கு வடக்கே துக்காச்சி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.


துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் சிவன் கோயில்.


இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (கி.பி. 730-795) பட்டப்பெயரான விடேல் விடுகு என்பதன் அடிப்படையில் துக்காச்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது. சோழ அரசர்களால் அமைக்கப்பட்ட இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருமையுடையதாகும்.


இக்கோயில் தென் திருக்காளத்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருக்காளத்தி என்ற தலமானது காற்று பூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதைப் போல இக்கோயில் அதற்கு இணையாக தென் காளத்தியாக விளங்குகிறது.


இத்தலத்தின் மூலவர் ஆபத்சகாயேசுவரர் ஆவார். இறைவி சௌந்தர நாயகி என்றழைக்கப்படுகிறார்.


சிற்ப வேலைப்பாடு மிக்க இக்கோயில் முன்னர் ஏழு திருச்சுற்றுகளைக் கொண்டிருந்ததாகவும், தற்போது மூன்று திருச்சுற்றுகளே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...