Tuesday, July 11, 2023

ஆளுநரைப் பற்றி 19 பக்க புகார் கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஆகிவிட்டது. இனி அடுத்தது என்ன?

 1. குடியரசுத் தலைவர் அதை மத்திய உள்துறைக்கு அனுப்பி விளக்கம் கேட்கலாம். கடிதத்தின் நகலை ஆளும் இருக்க அனுப்பி விளக்கம் கேட்கலாம்.

2. ஆளுநரை பதவி நீக்கம் செய்ய சட்ட சபைக்கு உரிமை இல்லை. உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். உச்ச நீதிமன்றம் பதவி நீக்கம் செய்ய முடியாது. சில நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டி ஆளுநருக்குக் கருத்து/ ஆலோசனைகள் மட்டுமே கூற முடியும்.
3. ஆளுநரின் எந்த நடவடிக்கையாவது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு விரோதமாக இருந்தால் அதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டும். ஆனாலும் உச்ச நீதிமன்றம் ஆளுநரை அப்புறப்படுத்த முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் சுட்டிக்காட்டலை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஆளுநரை நீக்க குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யும்.
4. இப்பொழுது கேள்வி என்னவென்றால் ஆளுநர் சட்டத்திற்குப் புறம்பாக என்ன செய்தார் என்பதுதான்.
அமைதிப் பூங்கா.
சனாதனம்.
திராவிட மாடல்.
ஆன்மீக பூமி.
திருக்குறள்.
சிதம்பரம் கோவில்.
இருவிரல் பரிசோதனை.
அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு ஒப்புதல்.
செந்தில் பாலாஜி பதவியில் நீடிக்க கூடாது என்று ஆலோசனை கூறியது.
இவை எல்லாவற்றுக்குமே ஆளுநர் விளக்கம் அளித்து குடியரசு தலைவரையும் மத்திய அரசையும் திருப்தி செய்ய முடியும்.
5. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிக்கு எதிரான சித்தாந்தத்தை உடைய மற்றொரு கட்சி மாநிலத்தில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி செய்வதால் ஆளுநரும் இந்த கட்சியின் சித்தாந்தத்தை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
6. ஒருவேளை குடியரசுத் தலைவர் திருப்தி அடைந்து விட்டால் ஆளுநர் பதவியில் தொடர் முடியும். அப்பொழுது ஆளும் கட்சி என்ன செய்ய முடியும்?
மக்களைத் தூண்டி விட்டு போராட்டம் செய்வது. ஆளுநர் வெளியில் செல்லும்போது கல் மற்றும் தடிகள் வீசுவது.
ஆளுநர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கட்சிக்காரர்களை அனுப்பி கருப்புக் கொடி காட்டச் செய்வது.
இவை அனைத்தையுமே திமுக கடந்த காலத்தில் செய்துள்ளது. நல்ல காலத்திலேயே இப்படி செய்வதுதான் திமுகவின் கொள்கை. கெட்ட காலத்தில் செய்ய மாட்டார்களா?
இதனாலெல்லாம் ஆளுநருடைய நடத்தையில், பேச்சில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
7. தாங்கள் எடுத்துக்கொண்ட சபதத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் முதல்வரும் அமைச்சர்களும் மற்ற தலைவர்களும் தான். ஆளுநர் அல்ல.
8. ஒருவேளை ஆளுநரை மத்திய அரசு ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்துமா?
அதாவது..... ஆளுநரை நீக்குகிறோம். நீங்கள் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விடுங்கள்.
ஆளுநரை நீக்குகிறோம். நீங்கள் ராஜ்யசபாவில் நாங்கள் கொண்டுவரும் மசோதாக்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...