ஓபிஎஸ் .
வைத்திலிங்கம் போனாலென்ன ??
அவர்கள் வணங்கும் கடவுள் வந்தாலும்...
பொதுவாக
அதிமுக என்பது தலைவர் காலம் வரை
ஜாதிகட்சியாக அடையாளபடுத்தபட வில்லை ...
திமுகவிலும் கூட ...
கலைஞர் காலத்தில் இந்த நிலை இருந்ததில்லை ...
பின்னர் சிறுபான்மையினரும்
தலித்களும் திமுகவின் வாக்கு வங்கியானது வேறு விசயம் ..
ஆனால் ..
அம்மா அவர்கள் வந்தபிறகு ...
சசிகலா ..
லைம்லைட்டில் வந்தபோது
முக்குலத்தோர் பெருவாரியாக அதிமுகவுக்கு ஆதரவாக திரள ஆரமித்தனர் ..
அம்மாவுக்கு இயல்பாகவே ஓபிசி ஆதரவு அமைந்து விட்டது ...
விசயத்துக்கு வருவோம் ..
முக்குலத்தோரின் அரசியல் கட்சிகள் முப்பது உள்ளது .
ஆனால் ...
அவர்களின் அரசியலில் முக்கிய புள்ளி என்றால் அது சசிகலா குடும்பம் தான் .
அதற்க்கும் காரணம் .
இன்று திமுகவிலும் சரி
அதிமுகவிலும் சரி ..
கோலோச்சி கொண்டிருக்கும் முக்கிய தளகர்த்தர்கள் பலரும்..
சசிகலா குடும்பத்தால் அவர்களால் அடையாளம் காட்டி அங்கீகாரம் கொடுக்கபட்டவர்கள்தான்
(இதில் ஜாதி வித்தியாசமே கிடையாது.)
அன்று முதல்வர் முகமாக பார்க்கபட்டவர் ஓபிஎஸ் ...
மற்ற முக்குலத்தோர் யாரும் அவ்வாறு பார்க்கபடவில்லை ...
அதிமுகவின் அதிகார வரிசை .
ஓபிஎஸ் வைத்திலிங்கம் இல்லையென்றால் ..
எடப்பாடி
தங்கமனி
வேலுமனி
முனுசாமி
ஜெயகுமார்
சன்முகம் ..
என்பதில் ஏழாவதாகதான் வரும் ..
இவர்கள் தவிர்த்த அதிமுகவில்
...
மற்ற முக்குலத்து தலைவர்கள் ..
காமராஜ்
உதயகுமார்
தின்டுகல் சீனிவாசன்
செல்லூர் ராஜூ ..
இவர்கள் எல்லாம் ..
வெறும் ஜோக்கர் கார்டுகள் தான் ..
டிரம்ப் கார்டுகள் அல்ல ...
இனி ஜாதிகட்சியாக மாறினால் கூட
கொங்குவில் கூட இவர்களால் ஜெயிக்க முடியுமா என்பது சந்தேகமே ...
கோவை மாவட்டத்தில் வெள்ளளூர் பேரூராட்சி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் அதிமுக
அடைந்த படு தோல்வியே உதாரணம் ...
ஏன் ..
எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் மாநராட்சியிலும்..
நகராட்சிகளிலும் படுதோல்வியைதான் அதிமுக சந்தித்தது ..
இப்படியே இது தொடருமானால் ..
இரட்டை இலையையும் தான்டி ..
பல தோல்விகளை சந்திப்பது நிச்சயம் .
பணம் என்பது களத்தில் நிற்பதை உறுதி செய்யலாமே தவிர ..
வெற்றிகளை தந்து விடாது ..
இது பழனிசாமிக்கும் தெளிவாக தெரியும் ..
No comments:
Post a Comment