Sunday, July 2, 2023

காஞ்சனா.

 பொதுவாக நடிகைகள் எல்லோரும் மிக இளையவயதில் நடிக்க வந்தவர்களாகவே இருப்பார்கள். அல்லது தாய், தந்தை இந்த களத்தில் இருந்து இவர்களை கொண்டு வந்து இருப்பார்கள்.

அவர்கள் ஒருவேளை இந்த களத்திற்கு வராமல் இருந்தால் என்னவாகிஇருப்பீர்கள் என்ற கேள்வியை வழக்கமாக நிருபர்கள் கேட்பதுண்டு அதற்கு அவர்கள் கலர் கலராக பதில் சொல்வதுண்டு. அது என்னவெனில் நான் பெரிய டாக்டர் ஆகியிருப்பேன், ஒரு எஞ்சினீயர் ஆகியிருப்பேன் என்பது போல.
ஆனால் உண்மையிலேயே அத்தகைய உயரத்தில் ஆம் நிஜமாகவே வெகு உயரத்தில் விமான பணிப்பெண்ணாக இருந்த இவரை இயக்குனர் ஸ்ரீதர் கண்டுபிடித்து நடிக்க அழைத்து வந்தார். அதுவரை இவருக்கு நடிப்பின் மீதான எண்ணம் துளியும் இல்லை.
ஆந்திராவில் பிறந்த இவர் இளவயதில் நல்ல கல்வியை பெற்று இருந்தார் பிறந்தது ஆந்திரா என்றாலும் சென்னையில் குடியேறிய இவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்தது. கல்லூரியில் படித்து கொண்டு இருந்த இவர் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு விமான பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பித்தார். தமிழ் தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சிறப்பாக பேசக்கூடிய இவருடைய தோற்றமும் பொலிவுடன் இருந்ததால், இவருக்கு அந்த வேலை இலகுவாக கிடைத்தது.
1964ல் தனது இருபத்தைந்தாவது வயதில் ஸ்ரீதர் படமான காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனுக்கு இணையாக நடித்தார். அதன் பிறகு ஸ்ரீதரின் பலபடங்களில் இவர் நாயகியாக தோன்றினார்.
தேடிவந்த திருமகள், பறக்கும் பாவை, கொடிமலர், அதே கண்கள், பாமா விஜயம், நாலும் தெரிந்தவன், தங்கை, துலாபாரம், பொண்ணு மாப்பிள்ளை, சாந்தி நிலையம், செல்லப்பெண், உத்தரவின்றி உள்ளே வா, விளையாட்டு பிள்ளை, சிவந்த மண், நியாயம் கேட்கிறோம் , அவளுகென்று ஒரு மனம் எங்களுக்கும் காதல் வரும் என்று கிட்டதட்ட இவை அனைத்துமே வெற்றிபடங்கள் இவர் பெயர் சொல்லும் படங்களாக அமைந்தது.
குறிப்பாக இதில் ரவிச்சந்திரனுக்கு இணையாக நடித்த படங்களான அதே கண்கள், உத்திரவின்றி உள்ளே வா, காதல் ஜோதி, தேடிவந்த திருமகள் , நாலும் தெரிந்தவன் ஆகிய படங்கள் பிரபலமானது
முத்துராமனோடுதான் அதிகம் நடித்துள்ளார் மொத்தம் பத்தொன்போது படங்கள்.
தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மொத்தம் 150 படங்கள் செய்துள்ளார்.
வெகு சீக்கிரமாகவே ஒய்வு பெற்ற அவர், பின்னர் அதிகம் படங்களில் தோன்றவில்லை.
ஒரு மரியாதைக்குரிய தோற்றத்துடன் இருக்கும் இவர் அதிகம் அலட்டி கொள்ளாமல் நடித்தார் என்றே சொல்ல வேண்டும். தனது தோற்றத்திற்கு ஏற்ப அந்தஸ்தான கதாபாத்திரங்களையே ஏற்றார்.
தனக்கு நகைச்சுவையும் வரும் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்தவர் உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் ஆகிய படங்களிலும் அதை நிரூபித்துள்ளார்.
தற்போதைய நடிகை வித்யாபாலன் இவரது தோற்றத்தை பெற்றுள்ளார்
எம்ஜியார் விருது, கலைமாமணி, கர்நாடக அரசின் விருது, ஸ்வர்ண கனக விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்
சிறந்த பக்திமானான இவர், மிக நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் தந்தையிடமிருந்து தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை நீதி மன்றத்தில் போராடி வெற்றி பெற்றார். கிட்டதட்ட அன்றைய தேதியில் பதினைந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை திருப்பதி தேவஸ்தானத்திற்கு எழுதி வைத்துள்ளார்.
திருமணம் செய்துகொள்ளாத இவர் தற்போது தனது எண்பதாவது வயதில் தங்கை கிரிஜாவோடு வாழ்ந்து வருகிறார்.
பணத்தினால் பாதிக்கபடாமல் அதை துறந்து வாழ்வதற்கும் ஒரு மனோ திடம் வேண்டும் அது இவருக்கு இருக்கிறது என உறுதியாக கூறலாம்
சிலர் சினிமாவால் தங்களது நல்வாழ்வை தொலைத்து அவதிக்கு உள்ளானதையும் பார்த்தோம். ஆனால் அதில் கௌரவமாகவும், மரியாதையுடனும் இருந்து காட்ட முடியும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.
May be an image of 1 person and smiling
All

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...