Monday, July 3, 2023

இந்து மதத்துக்கு ஆபத்து.

 

உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கீழ்க்காணும் நபர்களும், குழுக்களும் இந்துக் கோவில்களுக்குள் நுழைவதை நாடெங்கிலும் உடனே தடை செய்ய வேண்டும்.

1. வேற்று மதத்தவர்கள்

2. தீவிர இந்து மத எதிர்ப்பாளர்கள், வெறுப்பாளர்கள்

3. கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்

இவர்கள் எல்லோருக்கும் கோவில்களில் என்ன வேலை?

இவர்கள் எல்லோரும் கோவில்களுக்குள் நுழைவது, வணங்கவோ, வழிபடவோ அல்ல. அங்கே கலகம் விளைவிப்பதற்கும், பிரிவினை உணர்ச்சிகளைத் தூண்டவும், கோவில்களைச் சேதப்படுத்தவும், கோவில் சொத்துகளைத் திருடவும், சூறையாடவும், கோவிலுக்கு வரும் உண்மையான பக்தர்களை அச்சுறுத்தவும், வெளியே விரட்டி அடிக்கவும், வேண்டுமென்றே காவல் துறையை கோவிலுக்குள் வரவழைக்கவும், கோவிலில் நடைபெறும் பூஜைகள், திருவிழாக்களுக்கு இடையூறு உண்டாக்கவும், இந்து மதத்தைக் கேவலப்படுத்தவும், அர்ச்சகர்களைத் தாக்கவும், அவமானப்படுத்தவும், அச்சம் உண்டாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தவும், கோவில்களுக்கு இந்துக்கள் யாரும் செல்ல விடாமல் தடுக்கவும், அதைக் காரணம் காட்டிக் கோவில்களை இழுத்து மூடுவதற்கும் தான்.

மேற்சொன்ன கூட்டம் பயங்கரமானது. அரசியல் சாசனம் ஒவ்வொருவருக்கும் தந்திருக்கும் மதச் சுதந்திரத்துக்கும், வழிபாட்டுச் சுதந்திரத்துக்கும், நம்பிக்கைகளுக்கும், செயல்பாட்டுக்கும் எதிரே நடப்பது தான் அவர்களுடைய நோக்கம். ஆனால், இந்துக்கள் மட்டுமே அவர்களுடைய இலக்கு.

ஒரு கிறிஸ்துவ தேவாலயத்துக்குள் புகுந்தோ, இஸ்லாமியப் பள்ளிவாசலுக்குள் புகுந்தோ, அவர்களால் ரகளையில் ஈடுபட முடியுமா? அதற்கு தைரியமும், துணிச்சலும் அவர்களிடம் இருக்கிறதா? அப்படி ரகளை செய்தால், என்ன நடக்கும் என்பது அவர்கள் அறியாததா?

இங்கே சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? சதிகாரர்களின் ஆட்சி நடக்கிறதா? அதர்மமும், வன்முறையும் தலைவிரித்து ஆடுகிறதா? இன்னும் எத்தனை காலம் இந்த நிலை தொடரும்?

இந்த விஷயத்தில், அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம், ஊடகங்கள், மாநில, மத்திய அரசுகள், நீதிமன்றங்கள் எல்லோரையும் ஒரு சேர நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

என் கருத்துகளோடு உடன்படுகின்றவர்கள் எல்லோரும் பலமாகக் குரல் எழுப்புங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...