சிரமமான சூழ்நிலைகளிலும் கூட சிலர் வெற்றியை தவறவிடுவதில்லையே....!!!...ஏன்?
அதன் #ரகசியம் என்ன?
இரண்டு தனித்தனி அறைகள். இரண்டு அறைகளிலும்,ஒரு நீள்சதுர சாப்பாட்டு மேஜை போடப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு மேஜையிலும்,பக்கத்துக்கு மூவராக, மொத்தம் ஆறு நபர்கள் எதிரெதிராக அமர்திருக்கிறாரகள். அனைவருமே மிகுந்த பசியுடன் இருக்கிறார்கள்.
பாத்திரம் வைக்கப்பட்ட இடம் மேஜையின் மையப் பகுதி. இருப்பதோ ஒரு அறைக்கு ஆறு நபர்கள். ஒரே பாத்திரத்தில் இருக்கிற,கொதிக்கிற கஞ்சியை எப்படி சாப்பிடுவது என்று பரிதாபமாக பார்க்கையில், பன்னிரெண்டு கரண்டிகள் கொண்டு வரப்பட்டன.
ஒவ்வொரு அறையில் இருந்த பாத்திரத்துக்குள்ளும் ஆறு ஆறு, கரண்டிகள் போடப்படுகின்றன. எண்ணிக்கை சரிதான். ஆளுக்கு ஒரு கரண்டி. ஆனால், கரண்டியின் நீளம் மிகமிக அதிகம். கரண்டியால் கஞ்சியை மொண்டால் வாய்க்கு கொண்டு போக முடியாத அளவு மிக நீளமான கரண்டி.
முடிந்தவர் சாப்பிட்டுக்கொள்ளுங்கள் என்று ஏற்பாடு செய்தவர்கள் அறைகளை விட்டுப் போய்விட்டாரகள்.
பத்து நிமிடங்கள் முடிந்தது. முதல் அறைக்கதவைத் திறந்து பார்க்க, அங்கே அமளி துமளி. ஆளாளுக்கு ஒரு கரண்டியை வைத்துக்கொண்டு சாப்பிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். கரண்டிக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. மேஜையின் மீதும் தரையிலும் சிந்தியிருந்தது கஞ்சி.
சரி... அடுத்த அறையின் நிலைமை என்ன? அங்கே பாத்திரம் கிட்டதட்ட காலி. அவர்களும் ஆளுக்கு ஒரு கரண்டிதான் வைத்திருந்தார்கள்.
கரண்டிகளால் தான் மொண்டார்கள். ஆனால் தரையில் சிந்தாமல் சரியாக வாய்களில் விட்டுக்கொள்ள முடிந்தது. காரணம், அவர்கள் ஊற்றிக்கொண்டது அவரவர் வாய்களில் அல்ல. எதிர்பக்கம் அமர்ந்திருந்தவர்களின் வாய்களில். கரண்டியின் நீளம் அதற்காகவே செய்யப்பட்டது போல இருந்தது.
ஒரே சூழ்நிலை. முதல் அறையில் இருந்தவர்கள் வெறுப்பின் உச்சியில். அடுத்த அறையில் இருந்தவரகளோ, நினைத்ததை முடித்தவர்கள்.
" வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமானவற்றை செய்வதில்லை, செய்வதை வித்தியாசமாக செய்வார்கள்".
No comments:
Post a Comment