இரவு நேரத்தில், வீட்டுக்கு வெளியே நாய் சத்தம் கேட்டு வெளியில் வந்தார், அவர்.
தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார். அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது, அவருக்கு சற்று வியப்பை தந்தது.
சில நிமிடங்கள் கழிந்தும் கூட அது அசையாமல் அவரையே பார்த்தபடி நின்றிருந்தது.
உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து, அவரருகே நின்றது.
வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது.
பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது.
இவருக்கோ குழப்பம். ஏதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது.
இருப்பினும் நாய், இங்கே எதற்காக வந்தது? ரொம்பவும் குழம்பி போனார்.
இரவு உறங்கி விட்டு, காலையில் எழுந்து, குளித்து , உடைமாற்றி காலை உணவு முடித்து அலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது.
வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார். மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னான் வேலைக்காரன்.
மறுநாள் இரவு. மறுபடியும் அதே நேரம். அதே நாய். அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு, அதே இடத்தில் தூங்கி விட்டது. மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.
இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வருகிறது? என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒருநாள் ஒரு துண்டுச்சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார்.
மறுநாள் அந்த நாய் வரும்போது, கழுத்தில் வேறு ஒரு துண்டுச்சீட்டு இருந்தது.
படித்து விட்டு, உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அப்படி என்ன தான் எழுதியிருந்தது?..
"அன்பு மிக்கவருக்கு வணக்கம்! .
இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக இரவு வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது.
தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி".
பி.கு."ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன....
No comments:
Post a Comment