Monday, July 3, 2023

It is not meka dhaattu. It is meke dhaattu.

 

எல்லோரும் 'மேகதாது அணை' என்று பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். அதன் பெயர், 'மேகதாது' இல்லை. 'மேகெ தாட்டு' என்பது தான் சரியான பெயர். அந்த இடத்தில், காவிரி ஆறு மிகவும் குறுகலாக இருப்பதால், ஓர் ஆடு கூட ஆற்றின் ஒரு கரையில் இருந்து, மறு கரைக்கு எளிதாகத் தாண்டிக் குதித்து விடுமாம் (அந்தக் காலத்தில்). அதனால் தான், அப்பெயர்.

'மேகெ' (Meke) என்றால், கன்னடத்தில் 'ஆடு' (தெலுங்கிலும் அதே தான்). 'தாட்டு' என்றால் 'தாண்டு'. 'மேகெ' என்னும் சொல், 'மேஷம்' என்கிற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியது.

அந்த இடத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்குத் தமிழில் 'ஆடு தாண்டும் காவிரி' என்று பெயர்.

அந்த இடம், காவிரி ஆறு கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு எல்லைக்குள் நுழையும் இடத்துக்கு அருகே இருக்கிறது. 'ஹொகேனேக்கல்' (தமிழில் 'புகைக் கல்') அருவியில் இருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ஆகவே, அது 'மேகெதாட்டு' - 'மேகதாது' என்று இனிமேல் சொல்லாதீர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...