Thursday, July 13, 2023

அண்ணாமலையைக் கண்டாலே பதறுகிறார்கள்!

 "திமுக காரன் ஒரு லெவல் வரைக்கும் பொறுமையா இருப்பான்..!

ஆடு ஆடா இருக்கணும்..! ரொம்ப ஆடினால் பிரியாணி போட்ருவோம்..!"
- தி.மு.க பிரமுகர் இப்படிப் பேசியதற்கு வேறு யாராவது பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்தால் எப்படி REACTION கொடுத்திருப்பார்கள்?
சும்மா ஒரு ஜாலியான கற்பனை!
அமரர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி:- "விநாச காலே விபரீத புத்தி என்பார்கள்! பகவான்தான் இப்படிப் பேசுபவர்களுக்கு நல்ல புத்தியைத் தரணும்னு வேண்டிக்கறேன்!"
(அந்தப் பக்கம்:- "யோவ் ஐயரே? என்ன நக்கல் உடறியா? எவன் நாசமாப் போவானு பாத்துடலாமா? இறங்கி ரோட்டுக்கு வந்து பாருடா ஆரிய வந்தேறி!")
சி.பி.ராதாகிருஷ்ணன்:- "எனது இனிய நண்பர் மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்துக்கு இத்தகைய பேச்சைக் கொண்டு வருகிறேன்! ஒரு திருமண விழாவில் கூட அவரது மனம் குளிர்விக்கப் பேசியவன் அல்லவா நான்? அவர் நல்லுள்ளத்தோடு தமது கட்சிக்காரரை திருத்தி எங்களுடைய பணியை சுலபமாக்கி விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!"
(அந்தப் பக்கம்:- "இன்னா, இன்னா ராங் காட்டினு கீறே? என்னை இன்னாத்துக்குய்யா என் தலீவரு திருத்தணும்? பட்டா, ஓடிடு! இந்த குசால் வேலை எல்லாம் கோயமுத்தூரோட வச்சிக்க!")
பொன்னார்:- "பெருந்தலைவர் காமராஜரை அடியொற்றி அரசியல் தொடங்கியவன் நான்! அவர் காட்டிய தேசியத்தை - அஹிம்சையை மனதில் சுமப்பவன் நான்! காமராஜரை போலவே பொதுவாழ்வுக்காக குடும்ப வாழ்வைத் தியாகம் செய்தவன் நான்! என்னை பிரியாணி போடப் போவதாக சொல்வது அமைதியை விரும்பும் தமிழ் மண்ணுக்கு உரிய பாரம்பரியம் அல்ல என்பதை மெத்தப் பணிவன்போடு கழகத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்!"
(அந்தப் பக்கம்:- "அடிங் கொய்யால! உன் காமராசரையே குப்புறப் போட்டு கும்மியடிச்சவங்க நாங்க! இன்னா, காமராஜ் அது இதுன்னு கமால் காட்றியா எங்களாண்ட? 71 தேர்தல்ல அவர் குடியிருந்த வாடகை ஊட்டையே - "ஏழைப் பங்காளன் பங்களாவைப் பார்த்தியா?"-னு போஸ்டர் போட்டு எலீக்சன்ல அவருக்கு ஃபீஸை புடுங்கி விட்டவங்க! காமராசராவது கழுதை முட்டையாவது போவியா?")
தமிழிசை அக்கா:- "இப்படி பிரியாணி போடுவது என்றெல்லாம் பேசுவது அறிஞர் அண்ணா கற்றுத் தந்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டுக்கு உகந்ததுதானா என்பதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் சிந்தித்து தமது கட்சிக்காரருக்கு எடுத்துக் கூறித் திருத்த வேண்டும்! எனது திருமணமே கலைஞர் தலைமையில்தான் நடந்தது என்று கூறிக் கொண்டு - அவர் தலைமையில் அவரது மகள் போன்ற பாசத்தோடு திருமணம் செய்விக்கப்பட்ட என்னை - கலைஞரின் தமிழைக் கற்றவர்கள் இப்படி எல்லாம் "பிரியாணி போடுவது"- என்றெல்லாம் பேசுவது சரிதானா என்று யோசிக்க வேண்டும்! நான் அவர்கள் வீட்டுப் பெண்களை நினைத்தே வருந்துகிறேன்..."
(அந்தப் பக்கம்:- "இன்னாமே இன்னா? அவ்வளவு ரோசம் கீறவங்க உங்க அப்பன் குமரி அனந்தனுக்கு ஊடு வேணும்னு எங்க தலீவரண்ட வந்து ஏன் பிச்சை எடுக்க உடறீங்க? நாங்க போட்ட பிச்சைதான் உங்க அப்பனுக்கு ஊடு தெரிஞ்சிக்க! கரு... சி! பரட்...")
இப்போது FAST FORWARD செய்து அண்ணாமலைக்கு வருகிறோம்! இது கற்பனை அல்ல - நிஜம்! எதார்த்தம்!
அண்ணாமலை: "ஆர்.எஸ்.பாரதி அண்ணன் பேச்சுக்கும் அவர் வயசுக்கும் பொருத்தமில்லாம பேசறாரு! என்னை வெட்டி பிரியாணி போடறேங்கறாரு! ஆனா ஒரு விஷயம்ணா! இது காட்டுல அருவாள் பிடிச்ச கை! கிளுவ மரத்தை வெட்டின கை! நாளைக்கு கூட காலையில ஒன்பது மணியில் இருந்து மதியம் வரைக்கும் காட்டுல விவசாயம்தான் பார்க்கப் போறேன்! கிளுவ மரத்தை வெட்டப் போறேன்! யார் வெட்டினாலும் அருவாள் வெட்டும்! அதுவும் விவசாயி வெட்டினால் நல்லாவே வெட்டும்!"
(அந்தப் பக்கம்:- "....".."...." கப்சிப்!)
இதுதான் ஆன் தி டாட் பதில்!
இதுதான் இதுவரை அவர்கள் கண்டிராத பா.ஜ.க! அதனால்தான் திராவிட மாடல் அண்ணாமலையைக் கண்டாலே பதறுகிறார்கள்!
(அதே அண்ணாமலைதான் ஆதிசங்கரர் முதல் மத்வாச்சாரியார் போன்ற மகான்கள் - அண்ணாமலையின் வார்த்தையில் விஸ்வ குருக்கள்- பாரதத்தை இணைத்தார்கள் - ஒரு அரசு உத்தரவு போட்டு ஒன்றுபட்ட பாரதம் உருவாகவில்லை என்பதை நயம்படவும் எடுத்துக் கூறுவார்!)
எந்த வார்த்தையை எந்த வார்த்தையால் சந்திப்பது என்ற வித்தை தெரிந்த இளைஞன்!
கிளுவை மரமும் வெட்டுவார் - கீதை விளக்கமும் சொல்லுவார்!❤️❤️🔥🔥
May be an image of 1 person and beard

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...