நீதிமன்றத்தை அணுகுபவர்கள் தங்களுடைய பொழுது போக்குக்காகவா அணுகுவார்கள்?
பிரச்சனை இருப்பதால் நியாயம் கேட்டுத்தானே வழக்கு தொடருவார்கள்?
வலுவான காரணங்கள் இல்லாமல் தொடுத்த வழக்குகளை நீதிமன்றமே காரணம் காட்டி தள்ளுபடி செய்து விடும். மேலும் இதுபோன்று வழக்குத் தொடுப்பவர்களைக் கடுமையாகக் குற்றம் சாட்டி, அபராதம் விதிப்பதும் உண்டு.
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கொடுத்த வழக்கு நேர்மையான வழக்கு. நியாயம் கேட்டுத் தொடுத்த வழக்கு. பிரச்சனை இருக்கிறது. நீண்ட நாட்களாக இருக்கிறது. எத்தனையோ முறை சமரசம் செய்து கொள்ள முயன்றும் கூட பிரச்சினை தொடரத்தான் செய்கிறது. நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதை தவிர அவருக்கு வேறு வழி இல்லை.
ஆனால் வழக்கு என்ன என்று கேட்பதற்கு முன்னே சென்னை நீதிபதிகள் மனுதாரரின் நேர்மை பற்றி சந்தேகம் எழுப்புகின்றனர்!
இது எந்த வித நியாயம்?
வழக்கு என்ன என்று சற்று விசாரித்தாலே வழக்கின் முகாந்திரம் நீதிபதிகளுக்கு புரிந்து விடும். நேர்மையாக கொடுக்கப்பட்டதா இல்லை நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதற்காக கொடுக்கப்பட்டதா என்பது புரிந்துவிடும்.
அதை விட்டுவிட்டு எடுத்த எடுப்பிலேயே எதையும் பற்றிக் கேட்காமல் உங்கள் நேர்மையை பறைசாற்ற முன்பணம் கட்டுங்கள் என்று ஆணை இடுவது எப்படி நியாயம்?
இதுதான் நீதித்துறையின் தர்மமா?
வழக்கு தொடர்ந்தவரின் நேர்மையைப் பறைசாற்றும் விதம் அவரே முன்பணம் கட்ட வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?
இல்லை.
அப்படி இருக்க சென்னை உயர்நீதிமன்றம் ஏன் இப்படி மனுதாரரை வஞ்சிக்கிறது? தொல்லை கொடுக்கிறது?
ரங்கராஜன் நரசிம்மன் பூணூல் அணிந்தவர் என்பதாலா?
நெற்றியில் திருமண் அணிந்திருக்கிறார் என்பதாலா?
ஆங்கிலேய உடை அணியாமல் பாரம்பரிய உடை அணிந்திருக்கிறார் என்பதாலா?
இது நீதிமன்றம் தானா?
இவர்கள் நீதிபதிகள் தானா?
இந்த நீதிபதிகளின் தரம் இவ்வளவுதானா?
இவர்களைத் தட்டிக் கேட்க ஆட்களே இல்லையா?
ச்சீ என்று ஆகிவிட்டது!
No comments:
Post a Comment