Saturday, July 15, 2023

எப்படி பார்த்தாலும் வழக்கு நீர்த்து போய் விட்டது. மக்களுக்கு துரதிர்ஷ்டம். நீதிக்கு அதிர்ஷ்டம்.

 

செந்தில் பாலாஜி வழக்கில், 'Predicate Offence' என்னும் சொற்றொடர் அடிக்கடி அடிபடுவதை உங்களில் நிறையப் பேர் கவனித்திருப்பீர்கள்.

அதன் பொருள் யாதெனில், 'ஒரு பெரிய குற்றத்தின் ஒரு பகுதி' (A component of a large crime). இந்தச் சொற்றொடரை இந்த வழக்கில் பயன்படுத்திய கபில் சிபல், 'இத்தகைய சிறு குற்றத்துக்கு எல்லாம் கைது செய்யக் கூடாது' என்று வாதிட்டார்.

இதில் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய அம்சங்கள் இரண்டு உள்ளன.

1. கபில் சிபல் தன் வாயாலேயே, 'பண மோசடித் தடைச் சட்டம்' (PMLA, 2002) சிறிய குற்றம் என்றும், ஆனால் அதை விடப் பெரிய குற்றமான பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லிப் பலரை ஏமாற்றிய வழக்கு (2014-15), சமரசம் பேசி முடிக்கப்பட்டு, அதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு, வழக்கை முடித்து வைத்து விட்டது என்றும் அவர் ஒப்புக் கொண்டது போல் ஆகி விட்டது.

ஆகவே, மேற்சொன்ன குற்றம் நிகழ்ந்தது உண்மை தான் என்று செந்தில் பாலாஜி ஏற்கனவே தனது சத்தியப் பிரமாணத்தில் (Affidavit) ஒப்புக் கொண்டது, இன்னொரு தடவை அவருடைய வழக்கறிஞரால் நேற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

2. மேற்சொன்ன வழக்கை மறுபடியும் ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், அந்த வழக்கை 'ஊழல் தடுப்புச் சட்டத்தின்' (Prevention of Corruption Act, 1988) கீழ் தொடர்ந்து நடத்தும் படி அண்மையில் உத்தரவிட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். ஆகையால், 'இந்த நிலைமையில், தோண்டி எடுத்த பழைய வழக்கை இப்போது வாதாட எடுத்துக் கொள்ள இயலாது என்றும், ஆகையால், புதிய வழக்கை (PMLA, 2002) ஏதோ ஒரு சிறு குற்றம் போலச் சித்தரிக்க எண்ணுவதும்' தெள்ளத் தெளிவாகிறது.

என் விளக்கம்:

ஒரு பெரிய குற்றத்தின் ஒரு பகுதியே ஆயினும், பெரும் குற்றம் குறித்த வழக்கு நடக்கும் வரை, பிரித்துப் பார்க்க முடியாத அதன் ஓர் அங்கமான குற்றத்தையும் அந்த வழக்கோடு சேர்த்துத் தான் பார்க்க வேண்டும். தனியாக அணுக வாய்ப்பில்லை.

அது ஒரு புறமிருக்க, PMLA என்பது ஒரு சிறப்புச் சட்டம். அதன் நோக்கமே வேறு. அதன் கீழ் பதிவான வழக்குகளை நாம் இன்னொரு சட்டத்தின் கீழ் வரும் வழக்கோடு தொடர்பு செய்து பார்க்க முடியாது.

இதை உதாரணம் சொல்லி விளக்குகிறேன்.

1. முதல் குற்றம், லஞ்சம் வாங்கிய வழக்கு. அது, லஞ்ச ஒழிப்புச் சட்டம், 1988-ன் கீழ் வரும்.

2. அப்படி வாங்கிய பணத்தை முறைகேடாக வேறொரு இடத்தில் ரகசியமாக முதலீடு செய்வது, கருப்பை வெள்ளையாக்கும் (Money Laundering) குற்றமாகும். ஆகவே, அது PMLA, 2002-ன் கீழ் வரும்.

இரண்டும், வேறு வேறு வழக்குகள். இரண்டையும், தனித் தனியாகத் தான் நடத்த முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...