Thursday, July 13, 2023

நீ.. தி... ப... தி...!!! அதற்குப்பெயர்தான் ச..ட்..ட...ம்.

 

செந்தில் பாலாஜி வழக்கில் தி.மு.க. வழக்கறிஞர்கள் முதலில் இருந்தே சொல்லி வருவது, "ஆதாரங்களைத் தராமல் சிறை செய்வது, சட்ட விரோதம். ஆதலால், அது செல்லத் தக்கதல்ல".

அனுபவம் நிறைந்த, நடுநிலையான வழக்கறிஞர்களும், மூத்த காவல் துறை அதிகாரிகள் பலரும் சொல்வது என்னவென்றால், "ஒருவரைச் சிறை செய்யும் போது, அதற்கான முகாந்திரத்தை (Grounds for Arrest) அவருக்குத் தெரிவித்தால் போதுமானது. விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே ஆதாரங்களை எல்லாம் திரட்டி, குற்றம் சாட்டுபவருக்குத் தர வேண்டிய அவசியம் இல்லை.

விசாரணை முடிந்து, குற்றப் பத்திரிகை தயாரான பிறகு, வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்லும் போது தான், வழக்குக்கான சாட்சியங்கள், ஆதாரங்கள் எல்லாம் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும். எனவே, இவ்விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்படும் வாதங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல".

அது சரி என்றே எனக்கும் படுகிறது.

மேலும், விசாரணை நடக்கும் போது, குற்றப்பத்திரிகை இறுதி வடிவம் பெறுவதற்கு முன்பாக, புலனாய்வு அதிகாரிகள் கூடுதல் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் திரட்டுவதற்கு, சட்டத்தில் எங்குமே தடை இல்லை.

அது மட்டுமல்ல, புதிதாகக் கிடைத்த உண்மைகளை வைத்தும், ஆதாரங்களை அடிப்டையாகக் கொண்டும், 'கூடுதல் குற்றப் பத்திரிகை' (Additional Chargesheet) தாக்கல் செய்யவும் புலனாய்வு அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. இருப்பினும் அதை வேண்டுமென்றே இழுத்தடிக்காமல், விரைவில் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...