ஒரு ரூபாய் மட்டும் செலுத்துங்கள். வீட்டை வாங்கிச் செல்லுங்கள்!
ஒரு புடவை வாங்கினால் பத்து புடவைகள் இலவசம்!
-இது போன்ற விளம்பரங்கள் பார்த்திருக்கலாம்.
அட! என்று வியந்துபோய் போன் செய்து விசாரித்தால் அந்தச் சலுகையைப் பெற என்ன செய்யவேண்டும் என்று நிபந்தனைகள் சொல்வார்கள். இதை ஏன் முன்பே சொல்லவில்லை என்று சண்டை போடக் கூடாதல்லவா? அதற்காகவே அந்த விளம்பரத்தின் கடைகோடியில் லென்ஸ் வைத்துப் படிக்கும்படியாக 'நிபந்தனைகளுக்கு உட்பட்டது' என்று போட்டிருப்பார்கள்.
இனிமேல் அரசியல் கட்சிகளும் தேர்தலின்போது வாக்குறுதிகள் அளிக்கும்போது 'நிபந்தனைகளுக்கு உட்பட்டது' என்று சேர்த்துவிட்டால் யாரும் கேள்வி கேட்க வாய்ப்பிருக்காது அல்லவா?
No comments:
Post a Comment