Wednesday, July 12, 2023

அவர்கள் மேல் இருக்கும் அதிகாரிகளும் அதாவது புக்கிங் ஏஜெண்டுகளும் கண்டு கொள்வதில்லை.

 OLA. ஆட்டோ, கார் புக் செய்யும் போது.அவர்கள் நம்மிடம் எவ்வளவு Bill Amount காட்டுகிறது என்று கேட்கிறார்கள் நாம் தொகையை சொன்ன பின் கூடுதலாக தொகையை தந்தால் தான் சவாரி வரமுடியும் என்கிறார்கள்.Ola ஓட்டுனர்கள் அனைவரும் சிண்டிகேட் அமைத்து கூடுதல் கட்டணம் பெற்று வருகிறார்கள் Bill க்கு மேல் கட்டணம் பெறுவது சட்டப்படி குற்றமாகும்.

எனவே தாங்கள் Ola வில் சென்று கூடுதல் கட்டணம் கொடுத்து பயணத்தை முடித்த பின் உடன் Ola App ஐ Open செய்து இடது பக்க மேல் பக்கம் மூன்று கோடுகளை டச் செய்தால் அதில் Your Ride வரும் . அதில் கடைசி யாக பயணம் செய்ததை டச் செய்தால் கடைசியாக பயணம் செய்த Bill Details வரும் .
அதற்கு அடியில் வலது ஓரத்தில் Support என்பதை டச் செய்து Driver issue டச் செய்து. Driver demanded extra cash என்பதை டச் செய்து நீங்கள் கொடுத்த மொத்த தொகையை பதிவிட்ட பின் கூடுதல் தொகை எவ்வளவு என்பது அதுவே காட்டி விடும் பின்பு நமது வங்கி அக்கவுண்ட் எண் IFSC Code Branch name Branch location பதிவிட்டு Submit கொடுத்த பின்.நமது Mail க்கு Ticket no வழங்க படும். அதன் பின்னர் பத்து நாட்களுக்கு ள் வங்கி கணக்கில் கூடுதல் கட்டணம் பெறப்பட்ட தொகை வரவு வைக்கப்படும் என Mail. வரும்.
Ola கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கும் பயணிகள் இந்த வழிமுறை கையாள வேண்டுகிறேன்.
இந்த விழிப்புணர்வு பதிவை அனைவருக்கும் ஷேர் செய்ய வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...