கவியரசு கண்ணதாசன்,தன் மகளுக்கு திருமணம் வைத்திருக்கிறார் ஆனால் பணம் எங்கு கேட்டும் கிடைக்கவில்லை!
பணம் இல்லாமல் அவர் மனம் தவிக்கிறது!பணம் எப்படி புரட்டப்போகிறோம் என மனம் தடுமாறுகிறார்.
அந்த சந்தர்ப்பங்களில் சினிமாவிற்கு பாடல்களும் எழுதிகொண்டு இருக்கிறார் அதேபோல் பக்தி படமான தெய்வம் படத்திற்கு பாடல் எழுத போகிறார்.
மெட்டுகளை வாசித்தவுடன்,கவிஞர் வாயிலிருந்து பாடல் வரிகள் அருவியாக கொட்டுகிறது!
மருதமலை மாமணியே முருகய்யா!
தேவரின் குலம் காக்கும் வேலய்யா!!
இந்த வரிகளை சொல்லும் போது,பக்கத்து அறையில் இருந்து ஒருவர் வேகமாக அவரை நோக்கி ஓடோடி வருகிறார்!
ஆம் அவர் படத்தின் தயாரிப்பாளர்,சின்னப்ப தேவர் அவர்கள்!
தேவரின் குலம் காக்கும் வேலய்யா!
வரிகள் எனக்காக எழுதியது போல் இருந்தது எல்லாம் எங்கப்பன் முருகன் அருள் என லட்ச ரூபாய் பணப்பையை அவரிடம் திணிக்கிறார்.
கவியரசும் அந்த முருகனே கொடுப்பதாக எண்ணி நெகிழ்வுடன் வாங்கி கொள்கிறார்.
பிறகு அவர் வாயிலிருந்து இந்த பாடல் வரிகள் வந்து விழுகிறது..,
"சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் - நான் வருவேன்"
கண்ணதாசன் அடிப்படையில் கண்ணனின் பக்தர்.
*நீங்கள் நம்பினாலும் நம்புங்கள்,இந்த பதிவு எழுதி கொண்டு இருக்கிறேன் தூரத்தில் மருதமாமணியே முருகையா பாடல் ஒலிக்கிறது!
என் கண்களிலும் கண்ணீர் துளிகள்
No comments:
Post a Comment