உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்காது ஐந்து முகம் முருகன் எட்டு கரங்கள் . சத்தியமங்கலத்தில் இருந்து 25 கிமீ ஓதி மலை அன்னூர் அருகில் இரும்பறை
இங்கு இந்த பெயர் வர காரணம் பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை இரும்பு அறையில் பூட்டிய தால் இந்த ஊர் இரும்பறை ஓதி மலையடிவாரத்தில் பிரம்மன் கோவில் உள்ளது
சுவாமி மலையில் பிரணவத்தின் பொருள் சொன்னவர் இங்கு தான் வேதம் ஆகமங்களை உபதேசித்தார்.
போகர் இந்த முருகனை வணங்கி தவம் செய்து ஹோமம் செய்த போது முருகன் பழனி செல்லும் படி பணித்தார்.
இன்றும் மலையில் இருந்து ஈசான்ய மூலையில் கீழே பார்த்தால் இரண்டு கிமீ தொலைவில் வெள்ளையாக விபூதி இருப்பது போல் மண் இன்றும் உள்ளது இந்த மண் தான் மலையில் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது தற்போது இந்த ஊர் பூதிக்காடு என்று மருவியது.
போகரை வழியனுப்பி வைக்கும் போது தன் ஒரு சிகையை கொடுத்து அனுப்பினார் அந்த சிரம் அங்கு குமாரபாளையம் என்ற இடத்தில் நாகநாதேஸ்வர் கோவிலில் ஒரு முகம் நான்கு கரம் என்று காட்சி தருகிறார்( இன்றும் நம் வீட்டுக்கு முக்கிய நண்பர் விருந்தினரை வழி அனுப்ப வாசல் வரை வருகிறோம் அது போல் வழியனுப்பிய விபரமாக இருக்கலாம்)
சபரி மலை மலை ஏறுவது போல் ஓதி மலை ஏறுவது சுலபமல்ல மிகவும் கடினம் 1800 படிகள் கைப்பிடி இல்லாத படிகள் ஓய்வு எடுக்க இடமில்லை செங்குத்தான பாதை வழியில்
300 படிகளுக்கு ஒரு இடத்தில் ஒரு சிறிய நிழல் தரும் இடம் இரண்டு மட்டும் 850 படி வரை உண்டு .
மிகவும் கஷ்டப்பட்டு படி ஏறி போனால் சோமாஸ்கந்தர் அமைப்பில் முருகன் காட்சி தருகிறார் சப்த கன்னியர் , சிவன் ,அம்மன் உண்டு இந்த கோவிலில் பூ வைத்து உத்தரவு கேட்பதும் அங்குள்ள மக்களின் நம்பிக்கை.
கோவையில் இருந்து 48 கிமீ புளியம்பட்டி அங்கிருந்து 10 கிமீ போனால் இரும்பறை போகலாம்
திங்கள்-வெள்ளி காலை 10-மாலை6 மணிவரை கோவில் திறந்து இருக்கும் விதி விலக்கு கார்த்திகை அமாவாசை சஷ்டி நாட்கள் திறந்து இருக்கும்.
இவ்வளவு உயர் மலையில் ஒரு கிணறு உள்ளது நீரும் உண்டு! மிகவும் பழமையான கோவில் தல விருட்சம் ஓதி மரம். (தஞ்சை பகுதியில் திருமண அரசாணிகால் ஓதி மரத்தில் இன்றும் நடுவார்கள்)
கேட்ட வரம் கொடுக்கும் முருகன் மலையில் இருந்து பார்த்தால் பவானி சாகர் அணை நீர்மட்டம் தெரியும் மலையில் மயில் குரங்கு என இருக்கும்
காலணி இல்லாமல் ஏற முடியாது பாறைகளால் ஆன படிகள் இருப்பதால் காலையில் ஏறும் போது வெயில் இல்லாமல் இருக்கும் இறங்கும் போது பாதம் பழுத்து விடும் கவனமாக போக வேண்டும்.
No comments:
Post a Comment