Saturday, July 1, 2023

நல்ல தமிழ் கற்போம்.

 

நாம் தமிழில் உபயோகிக்கும் 'கம்மி' என்கிற வார்த்தை, 'கம்' என்னும் இந்தி வார்த்தையில் இருந்து பிறந்தது. இச்சொல்லைத் தமிழர்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக, 'குறைவு', 'தாழ்வு' முதலான சொற்களை இடத்துக்குத் தகுந்தாற் போல உபயோகிக்கலாம்.

'அதிகம்' என்பது 'அதிக' என்கிற சம்ஸ்கிருத மொழிச் சொல் ஆகும். ஆகவே, அதற்கு மாற்றாக, 'கூடுதல்' என்னும் சொல்லைப் பயன்படுத்துதல் நலம்.

'பதில்' என்பது, இந்திச் சொல்லான 'பத்லீ' (Badlee)யில் இருந்து உருவானது. நாம், 'விடை' (Reply/Answer) என்கிற சொல்லையும், 'மாற்று' (Substitute/Alternate) என்னும் சொல்லையும் இடத்துக்குத் தகுந்தாற் போலப் பயன்படுத்தலாம்.

அது போலவே, 'சவால்' என்றால் இந்தியில் 'கேள்வி' என்று பொருள். ஆனால், 'சவால்' என்னும் சொல்லை நாம் 'Challenge' என்கிற பொருளில் பயன்படுத்துகிறோம். இதற்கு நேரான தமிழ் வார்த்தை 'அறைகூவல்' என்பதே.

'Pledge' என்றால், 'சூள்' என்று பொருள்.

மேலும், 'Race' என்பதற்குப் 'ஓட்டப் பந்தயம்' அல்லது 'இனம்' என்று இடத்துக்குத் தகுந்தாற் போல் பொருள் கொள்ளல் வேண்டும்.

'Competition' என்றால், மற்றவர்களோடு போடும் 'போட்டி'. 'Contest' என்றால், பரிசு அல்லது விருதுக்கான முயற்சி. 'Betting' என்பதற்கு, 'பந்தயம்' என்று பொருள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...