Tuesday, September 12, 2017

நீட் தேர்வு பற்றிய என் ஐயங்கள்- பதில் தெரிந்தோர் விளக்கவும்.

1.தமிழகத்தின் 85 விழுக்காடு இடங்களும் தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களால் நிரம்பி விட்டனவா?
2.இவற்றில், CBSE கல்வி பயின்றோர் எத்தனை விழுக்காடு? கடந்த 5 ஆண்டுகளில் CBSE கல்வி பயின்றோர் எத்தனை விழுக்காடு இடங்களைப் பெற்றனர்?
3.அரசுப் பள்ளிகளில் படித்தோர் எவ்வளவு பேருக்கு இவ்வாண்டு இடம் கிடைத்தது? கடந்த ஆண்டுகளில் எவ்வளவு பேருக்குக் கிடைத்தது?
4.தமிழகத்தில் 85 விழுக்காடு இடங்களில், இட ஒதுக்கீடு உண்டா?
5.நிர்வாகத்தின் இடங்கள் நிரப்பப்பட்டு விட்டனவா? அவை எத்தனை விழுக்காடு தமிழக மாணவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன?
6.ஆந்திராவில், 100 விழுக்காடு இடங்களும் அம்மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கே, பிறர்க்கல்ல என்ற சட்டம் இருப்பது உண்மையா?
7.உண்மையானால், தமிழகம் இதுபோல் ஒரு சட்டம் கொண்டு வருவதை, நடுவண் அரசும், உச்ச நீதி மன்றமும் ஏற்றுக் கொள்ளுமா?
8.ஆந்திர மாணவர்கள், வெளி மாநிலங்களில் உள்ள 15 விழுக்காடு இடங்களில் சேர, தகுதி பெற்றவர்களா?
9.தமிழக மாணவர்களுக்கு, வெளி மாநிலங்களில் இடம் கிடைத்திருக்கிறதா?
பி.கு.: இவ்வினாக்கள் இந்த ஆண்டு நிலையைப் புரிந்து கொள்ளவே. 2018 இல், தமிழக மாணவர்கள் அமோக வெற்றி கொள்வர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...