Wednesday, September 13, 2017

செய்தியாளர் ஹரிஹரன்..

தந்தி தொலைக்காட்சியில் செய்தியாளர் ஹரிஹரன், புதியதமிழகம் கிருஷ்ணசாமி அவர்களை எடுத்த பேட்டி அருவருப்பின் உச்சம். இவ்வளவு மோசமான வன்மத்துடனும் சார்புடனும் தந்தி தொலைகாட்சி ஏன் அவரை அனுக வேண்டும்? ஹரிஹரனுடைய உடல் மொழி மோசமாக இருக்கிறது. அவர் தன் உடையில் காட்டிய நாகரிகத்தை உரையாடலில் காண்பித்திருக்கலாம். பல்டி என்ற சொல்லெல்லாம் ஒரு பண்பான உரையாடலில் காலித்தனமான சொல் என்றே நான் கருதுகிறேன். ஏன் மாற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்டிருக்கலாம். ஆனால் அவர் கேவலமான சொல்லாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கான ஊதியம் இதற்காகக் கொடுக்கப்படுகிறது போலிருக்கிறது. அடைப்படையான உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் ஹரிகரன் கேள்விகளாகக் கேட்டிருக்கிறார். CBSE அடிப்படையில் நீட் தேர்வு ஏன் நடத்த வேண்டும் என்று கேட்கிறார். மாநில பாடத்திட்டமும் அதுதான் என்ற சாதாரண உண்மை அவருக்குத் தெரியாதா? ஊடகத்திலிருந்துகொண்டு அதைக் கூட அறியாமல் இவர் இருக்கலாமா? பதினோராம் வகுப்பு பாடங்களிலிருந்து கேள்விகள் வருகின்றன ஆனால் அதை பள்ளிகள் நடத்துவதில்லை என்ற உண்மையை இவர் அறிய மாட்டாரா?
எந்த தற்கொலையும் ஏன் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படுகிறது? தொடர்புடையவர்கள் வேண்டாம் என்று சொன்னால் விட்டுவிடுவார்களா! சந்தேகம் என்று வந்துவிட்டால் விசாரிக்க வேண்டியதுதானே முறை. வழ்க்கு மன்றமே இந்த விசாராணையை ஏற்காவிட்டாலும் ஊடகம் என்ற முறையில் இவர்களே விசாரிக்கலாமே. அவர்களின் தொடர்பானவர்களும் குற்றம் சாட்டப்படுபவர்களும் சந்தேகமில்லை என்று சொல்லிவிட்டால் தந்தி தொலைக்காட்சி விட்டுவிடும் போலிருக்கிறது.
பாஜகவின் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் பகிரங்கமாக திருச்சி பொதுக்கூட்டத்தில் விசாரணை வேண்டுமென்று கேட்டிருக்கிறார். அதை விட்டு விட்டு கிருஷ்ணசாமி மட்டும் தான் கேட்டார் என்ற பச்சைப் பொய்யை தந்தி தொலைக்காட்சி ஊரறியச் சொல்கிறதே, அவர்களுக்கு என்ன ஆதாயம்?
இவ்வளவுக்கும் பொறுமையாகப் பதில்களைச் சொன்ன மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.
பல மாணவர்களை திசை திருப்பி, குழப்பி அடித்து அவர்களை நீட் தேர்வு சரியாக எழுத விடாத கொடுமை பஞ்சமா பாதகத்தை விட கொடுமையானது. அதைச் செய்தவர்களில் முதன்மையானவர்கள் ஊடகத்தினர். அந்தக் கயமைக்கு மேலும் கயமை சேர்ப்பதாக இந்தப் பேட்டி அமைந்திருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...