Saturday, April 7, 2018

அவ்வளவு தான் வித்தியாசம்.....!!



ஒரு மிகப்பெரிய அரசருக்கு அவருடைய,
எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ,
*ஒரு கனவு வந்தது.*
காலையில் பீதியுடன் எழுந்த அரசர்,
அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று,
பயந்துபோய் முதல் வேலையாக ஒரு" நாடி ஜோதிடரை " வரவழைத்தார்.
அந்த நாடி ஜோதிடர்,
*தனது ஓலைச்சுவடியை எடுத்து,
அதில்
"பொக்கை வாய் கனவு" , பற்றி விளக்கியிருந்த,
ஒரு ஓலையை வாசித்துவிட்டு,
"அரசே ! 
உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் ,
உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் "* ....
என்று பலன் சொன்னார்.
அந்த அரசர் மிகவும் கோபமுற்று,
*"இவரைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!"*
என்று உத்தரவிட்டார்.
அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை.
*இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து,
அவரிடம் ,
தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினார்.*
அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத் தான் வைத்திருந்தார்.
அவரும் அதைப் பார்த்துவிட்டு,
*"மன்னா...! 
உங்கள் சொந்த, பந்தங்களை எல்லாம் விட,
நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்"*
என்று பலன் கூறினார்.
இதனால் மனம் குளிர்ந்த அரசர்,
அந்த *ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்.*
*_இருவரும் அதே ஓலையைத் தான் படித்தார்கள்....!!
அதே விஷயத்தைதான் சொன்னார்கள்._*
ஒருவர் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார்...!!
இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார்.....!!
அவ்வளவு தான் வித்தியாசம்.....!!
பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால் ,
"வாழ்க்கையை ஜெயிக்கலாம்" .....!!
*நாம் பேசும் வார்த்தைகள்,
மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே* தவிர ,
எந்தவித மனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக்
கொள்ளவேண்டும்....!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...