இதை ஏதோ வெறுப்பில் சொல்லவில்லை அவரது நடவடிக்கைகளின் அடிப்படையில் தான் சொல்கிறேன். மிகப்பெரிய பெரும்பாண்மையோடு ஆட்சியில் இருந்தும் மிக பலவீனமாக செயல்பட்டவர் இவர் ஒருவரே காரணங்கள் கீழே...
1. மாட்டுக்கறி விற்பனைக்கு தடை..
போராட்டம் வெடித்ததும் வாபஸ்.
2. பண மதிப்பிழப்பு , கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை
(முழு தோல்வி இன்று வரை கணக்கு காட்ட திராணி இல்லை )
3. Article 370 ஐ நீக்குவதாக அறிவிப்பு
( போராட்டம் தொடங்கியதும் வாபஸ் ).
4. பாகிஸ்தானுக்கு இறுதி எச்சரிக்கை
( ஒவ்வொரு மாதமும் இறுதி எச்சரிக்கைதான்.)
5. உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த கர்நாடக மாநில அரசிடம் மண்டியிட்ட வரலாறு...
6. உள்நாட்டு பயணத்துக்கே பயந்து வாபஸ் ( அந்த லட்சணத்துல இருக்கு நாட்டின் பாதுகாப்பு )
7. SC/ST வன்கொடுமை சட்டத்தில் நீதிமன்றம் கொண்டுவந்த திருத்தத்தில் போராட்டத்துக்கு பயந்து அதை மாற்றி அமைக்க உறுதி கொடுத்தது....
8. காங்கிரஸ் ஆட்சியில் இவர் தவறு என்று எதிர்த்து போராடிய GST, ஆதார், பெட்ரோல் விலை நிர்ணயம் போன்ற எல்லா தேச துரோக திட்டங்களையும் ( அப்படிதான் அப்போது சொன்னாங்க) இன்று புது திட்டம் போட திறமையின்றி நடைமுறைப்படுத்துவது...
9. எந்த ஊழலையும் நிறுபிக்கவோ புதிய ஊழல்களை கண்டுபிடிக்கவோ வக்கற்ற நிலை.!!!
No comments:
Post a Comment