தொல்.திருமாவளவன் அவருடைய
சிஷ்யன் வன்னியரசு அவர்களின்
நாடகங்களும் தவறான வழிகாட்டுதலால்
சாதி மோதலை உருக்கி அரசியல் நடத்த விரும்புகின்றனரா?
தொல்.திருமாவளவனுடன்
கூட்டணி வைக்கும் கட்சிகளை
வரும் தேர்தலில் வன்னியர்கள் புறக்கணிப்போம்.
சிஷ்யன் வன்னியரசு அவர்களின்
நாடகங்களும் தவறான வழிகாட்டுதலால்
சாதி மோதலை உருக்கி அரசியல் நடத்த விரும்புகின்றனரா?
தொல்.திருமாவளவனுடன்
கூட்டணி வைக்கும் கட்சிகளை
வரும் தேர்தலில் வன்னியர்கள் புறக்கணிப்போம்.
அரசியலின் இன்னொரு பக்கம்....
சில நாட்களுக்கு முன்பாக, கடலூர் மாவட்டத்தில், 16 வயதுடைய தலித் பள்ளி மாணவி ஒருவர், பாலியல் #வன்புணர்வு செய்து , கொல்லப்பட்டிருக்கிறார்...
இது, மிகவும் கொடூரமான குற்றம்,
என்பதிலோ, இதில் ஈடுபட்டவர்கள், மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ, #மனிதனாக பிறந்த யாருக்கும் மாற்று அபிப்பிராயம் இருக்கப்போவதில்லை...
என்பதிலோ, இதில் ஈடுபட்டவர்கள், மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ, #மனிதனாக பிறந்த யாருக்கும் மாற்று அபிப்பிராயம் இருக்கப்போவதில்லை...
இதிலும், சாதி பார்த்து, அரசியல் செய்த கொடுமையான நிகழ்வு நடந்துள்ளது...
இந்த சம்பவம் கேள்விப்பட்டவுடன் காவல்துறையினர், விசாரணை செய்யவும், சட்டப்படியான நடைமுறைகளை மேற்கொள்ளவும் அங்கு வந்திருக்கிறார்கள்...
தலித் அரசியல் செய்யும் அமைப்புகளை சார்ந்த பலரும், தலித்துகளுக்கு நன்மை(?????) செய்வதையே தங்கள் பிறவியின் நோக்கமாக கொண்ட கட்சியினரும் இணைந்து,”இந்தக் கொடூரத்தை செய்தது,”ஆதிக்கசாதி” யான வன்னியர் இனத்தை சேர்ந்தவர்கள் மூவர்தான்”, என்றும், “அவர்களை கைது செய்து, இந்த வழக்கினை, SC&ST Atrocities prevention Act, ன் கீழ் உள்ள பிரிவுகளின் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டும்”, எனவும் #மிகுந்தஅழுத்தம் கொடுத்து, முற்றுகை போராட்டம், சாலைமறியல் போன்ற வழிகளையும் கையாண்டுள்ளனர்....
இவர்களது அழுத்தத்திற்கு #பணிந்த காவல்துறை, மேற்சொன்ன சட்டத்தின் படியே வழக்கு பதிவு செய்து, அவர்கள் குறிப்பிட்ட மூன்று #வன்னிய இளைஞர்களை கைது செய்து விசாரித்துள்ளனர்...
விசாரணையின் போது, அந்த மூவருக்கும், இந்த கொலை சம்பவத்திற்கும் #தொடர்பில்லையென தெரிய வந்துள்ளது...
மேலும், அந்த இறந்து போன சிறுமியுடன் பழகிவந்த #அதேஜாதியை சேர்ந்த ஒரு இளைஞன்தான் இந்த கொலைக்கு காரணம் என்று கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்..
இதற்கிடையில், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அரசு வழங்கும் #இழப்பீட்டுத் தொகையான ரூபாய்.ஐந்து லட்சமும், இறந்துபோன சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கப்பட இருந்தது, நிறுத்தப்பட்டுள்ளது...
இந்த நிலையில், என் மனதில் எழும் சில கேள்விகள்.......
1)அப்பாவிகளின் மேல் வழக்கு பதியுமாறு காவல்துறையை பயமுறுத்தி வெற்றி பெற்றவர்கள் #ஆதிக்க சாதியினரா?
இல்லை, பொய்யான பழி சுமந்து போலீஸ் சித்திரவதைக்கு ஆளான வன்னியர்கள்
ஆதிக்க சாதியினரா?
இல்லை, பொய்யான பழி சுமந்து போலீஸ் சித்திரவதைக்கு ஆளான வன்னியர்கள்
ஆதிக்க சாதியினரா?
2)தன் பெண், இன்னொருவனுடன் பழகுவது தெரிந்தும், அவனை விசாரணையில் சொல்லாமல், நஷ்ட ஈடு கிடைக்கும் என்ற காரணத்துக்காக, அப்பாவி வன்னிய இளைஞர்களை மாட்டிவிட்ட அந்த #பெற்றோருக்கு என்ன தண்டனை இந்த சட்டம் கொடுக்கப்போகிறது?
3)எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், வன்னிய இளைஞர்களின் மீது குற்றம் சாட்டிய தலித் மற்றும் சில கட்சிகளுக்கு என்ன #தண்டனை?
4)நஷ்ட ஈடாக கிடைக்கும் பணத்தில், இந்த அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு பங்கு உண்டோ என்ற #சந்தேகம்எழுகிறதே?
5)தவறே செய்யாமல், காவல்துறையால் துன்புறுத்தப்பட்ட அந்த வன்னியர் இளைஞர்களுக்கு, என்ன #நிவாரணம்?
6)அறிவு இல்லாதமல், முறையான விசாரணை இல்லாமல், அப்பாவிகளின் மேல், கொடுமையான சட்டப்பிரிவுகளில், தலித் அமைப்பினருக்கு பயந்து, வழக்கு பதிவு செய்த சுரணையற்ற காவல்துறை அதிகாரிகளுக்கும், பொய்யான இழப்பீடாக ஐந்து லட்சரூபாய் அரசுப்பணத்தை கொடுக்க முயன்ற மாவட்ட நிர்வாகத்துக்கு என்ன தண்டனை?
7)அடிப்படையை இல்லாமல், யாரையும் கைது செய்து உள்ளே தள்ள முயலும் தலித் அமைப்புகள் இருக்கும்போது, இந்த தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படாதா? இந்த சட்டம் #திருத்தப்பட வேண்டாமா?
8)ஒரு வேளை உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க தாமதமாயிருந்தால், காவல்துறை இந்த மூன்று அப்பாவிகளை பலிகடா ஆக்கி, வழக்கை #முடித்திருக்குமே? உண்மை கொலைகாரன், ஊரில் இன்னொரு பெண்ணை வேட்டையாடுவானே? அப்பாவிகளின் குடும்பம் கொலைப்பழி சுமந்து, வாழ்நாள் முழுதும் வேதனை அனுபவிக்குமே?
என்ன கொடுமை இது? இந்த வழக்கு விஷயத்தை படித்து என் மனதில் எழுந்த ஆதங்கம் இது.
நடுநிலையாக சிந்தித்து பின்னூட்டம் இடுங்கள்.. வேதனையுடன்
No comments:
Post a Comment