முதல் கதை:-
அதாவது கருணாநிதியும் அவர் நண்பரும் சின்னவயதில் கமலாலய குளத்தில் நீந்திக்கொண்டிருந்தார்களாம் குளத்தை பாதிதூரம் கடந்ததும் என்னால் நீந்த முடியவில்லை திரும்பி போய்விடலாம் என்று நண்பர் சொன்னாராம் அதற்கு கருணாநிதி திரும்பி பாதி தூரம் மீண்டும் நீந்தி போவதற்கு நேராக போய் அதே பாதி தூரத்தில் ஆற்றை கடந்துவிடலாம் என்று சொன்னாராம். அந்த வயதிலேயே அவருக்கு தன்னம்பிக்கை அதிகமென்று தெரிந்த சம்பவமாம்.
இரண்டாவது கதை:-
திராவிடர் கழக கொடி வடிவடைமைப்பில் தலைவர்கள் எல்லாம் இருந்தார்களாம் கருப்பு மை இருந்ததாம் அதை வைத்து கருப்பை அடித்துவிட்டார்களாம் ஆனால் சிகப்பு மை இல்லையாம். பக்கத்தில் இருந்த இளைஞர் கருணாநிதி ஓடி சென்று தன் கையை குத்தி கிழித்து அதில் வந்த ரத்தத்தை எடுத்து நடுவில் பொட்டுவைத்தாராம். அப்படித்தான் கொடி உருவானதாம்.
இந்த கதை எல்லாம் கருணாநிதியே சொன்னது. இப்படி பல நூறு இல்லை பல்லாயிரம் கதை இருக்கிறது திராவிட இயக்க கட்சி தலைவர்கள் மேடையில் அடித்துவிட்ட கதைகள். கருணாநிதிக்கு நீச்சல் தெரியுமா? ரத்தத்தில் பொட்டு வைப்பது பகுத்தறிவா? என்றெல்லாம் கேள்வியே கேட்காமல் வாய்க்குள் ஈ போவது தெரியாமல் புல்லரித்து கைதட்டிய கூட்டம்.
No comments:
Post a Comment