50, 100, 200, 500 ஓவா தரிசனங்களுக்கு தனித்தனி கியூ.அமைக்கப்படும். இலவச தரிசனம் தான் வேண்டும் என்றால் கோவிலை சுற்றி பாம்பு மாதிரி நெளிந்து நெளிந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரமாவது ஒரு சுத்து சுத்தி பதினெட்டாம் படியை வந்து அடையும்படி அமைக்கப்பட்டிருக்கும்.
- இருமுடி கோவில் வளாகத்தில் இருந்து தான் வாங்கனும்
- 18 படிகளுக்கு அருகாமை வரையிலும் க,க (கயக கண்மணி) மற்றும் ர ர (ரத்தத்தின் ரத்தம்) க்கள் பினாமிகளின் கடைகள் அமைக்கப்படும்
- ஐயப்பனுக்கு நிவேதனம் செய்யும் பிரசாதங்களுக்கு பதிலாக லட்டு, ஜிலேபி, அதிரசம், மனோகரம், சீடை, முறுக்கு இத்தியாதிகள் அந்த கடைகளில் தாராளமாக கிடைக்கும்.
- ஒரிஜினல் ஐயப்பன் சிலை என்றோ அறமில்லா துறையின் உதவியுடன் கக / ரர க்களால் ஆட்டை போடப்பட்டு அதற்கு பதில் டுப்ளிகேட் சிலை வைக்கப்பட்டிருக்கும்.
- சபரிமலை என்கிற அந்த மலையில் கனிம வளங்கள் இல்லாமலா இருக்கும்? அந்த கனிம வளங்களுடனான மலை அப்படியே இருந்தால் தெய்வ..சாரி .. பகூத்தறிவு குத்தம் ஆகிடுமே. அதனால் பிஆர்பி, வைகுண்டம் போன்றவர்கள் மூலமாக அப்படியே சுரண்டப்படும்
- பல வருஷங்கள் கழித்து யாராவது குடாக்கு வழக்கு தொடர்ந்தால் - சபரிமலை மற்றும் ஐயப்பன் இருந்ததாக வரலாற்று சான்றிதழ் எதுவும் இல்லை. அதிலும் கால்டுவெல் இதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை யுவர் ஆனர் என்று சொல்லிட்டால் போச்சு.
No comments:
Post a Comment