தம்பித்துரை...
தினகரன் பாசத்தில்...
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வேட்டு:
தினகரன் பாசத்தில்...
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வேட்டு:
'டிடிவி என்ன மகானா? அவர் அதிமுக உறுப்பினரே இல்லை. மறைந்த மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்த காலத்தில் அவர் 10 ஆண்டுகளாக காணாமல் போய் இருந்தார். பின்னர் அவர் குறித்து எப்படி கருத்து தெரிவிக்க முடியும். நிருபர்களாகிய உங்களுக்கு பரபரப்பு செய்தி தேவைப்பட்டால் அவர் குறித்து செய்தி போட்டுக் கொள்ளுங்கள். சமீபத்தில் அ.ம.மு.க விலிருந்து வந்தவர்கள் எனது முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அ.தி.மு.க.வில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. தினகரனை தவிர அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம். அவர்கள் உரிய மரியாதையுடன் அ.தி.மு.க.வில் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்' - தினகரன் தொடர்பான கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய வார்த்தைகள் இவை.
தினகரன் தொடர்பான கேள்விகளைக் கேட்டாலே, அமைச்சர் ஜெயக்குமார் உள்பட மந்திரிகள் பலரும் இதே ஸ்டேட்மெண்ட்டைத்தான் ரெடிமேடாகப் பேசுகின்றனர். ஆனால், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டில் இருக்கிறார். கூட்டணி குறித்து அவர் பேசிய வார்த்தைகளை பொன்.ராதாகிருஷ்ணன் விரும்பவில்லை. முடிவெடுக்க வேண்டியது எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும்தான் என விளக்கம் கொடுத்திருக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.
தமிழக அரசு, அதிமுக தொடர்பான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் தம்பிதுரை, சசிகலா குடும்பம், தினகரன் தொடர்பான கேள்விகளை ஓரம்கட்டி விடுகிறார். இதற்கான காரணத்தைக் கூறும் அதிமுகவினர், ' கூவத்தூர் அரசியல் நடந்து கொண்டிருந்தபோது, சசிகலா சி.எம்மாக வாய்ப்பில்லை என்பதை அறிந்த தம்பிதுரை, டெல்லி சோர்ஸுகள் மூலமாக முயற்சி செய்தார். அதேநேரம், கேரள கவர்னர் சதாசிவம் மூலமாக எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தியது. இதில் எடப்பாடிக்கே ஜாக்பாட் அடித்தது.
இதனால் படுஅப்செட்டில் இருந்தார் தம்பிதுரை. இப்போது சில மாதங்களாக அமமுக, அதிமுக இணைப்பு பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். சசிகலா சிறையில் இருந்து வந்துவிட்டால், அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கின்றனர். ஒருவேளை அப்படி நடந்தால், கட்சிக்கு மூத்தவர் என்ற அடிப்படையில் தன்னை பொதுச் செயலாளர் ஆக்கிவிடுவார்கள் என எதிர்பார்க்கிறார். அதற்கு முன்னோட்டமாகத்தான் தினகரன் பற்றிய கேள்விகளை வந்தால், ஜம்ப் அடிக்கிறார் தம்பிதுரை'.
அதுமட்டுமல்ல இன்று வரை சசிகலா தினகரன் கும்பலோடு தொடர்பெல்லைக்கு உள்ளேயே இருந்து வருகிறார் தம்பிதுரை..
அதுமட்டுமல்ல இன்று வரை சசிகலா தினகரன் கும்பலோடு தொடர்பெல்லைக்கு உள்ளேயே இருந்து வருகிறார் தம்பிதுரை..
சசிகலா தினகரன் பேச விரும்புவதை .. தம்பிதுரை வழியாக பேசிவருகிறார்கள்.
நடிப்பு மட்டுமே தம்பிதுரை...
கதை.. வசனம்... இயக்கம்... எல்லாமே 420 தினகரன் தான்.
நடிப்பு மட்டுமே தம்பிதுரை...
கதை.. வசனம்... இயக்கம்... எல்லாமே 420 தினகரன் தான்.
அ.தி.மு.க.,வில், ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்த, அரசியல் அனுபவம் வாய்ந்த, வயதிலும் மூத்த தலைவர் தம்பித்துரை என்றால் அது மிகையாகாது. ஆயினும், அவர் தன் சொந்த செல்வாக்கில் எம்.பி., ஆனாரா என்றால், அது நிச்சயம் கிடையாது என்பதே அ.தி.மு.க., அபிமானிகளின் கருத்து.
‛‛தம்பித்துரை மட்டுமல்ல, அ.தி.மு.க.,வை சேர்ந்த எந்த ஒரு எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,வும், அப்படி சொல்லிக்கொள்ள முடியாது. மூச்சுக்கு முன்னுாறு முறை, அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி எனக் கூறுகின்றனரே அது தான் உண்மை’’ என, ஜெ.,விசுவாசிகள் பலரும் குமுறுகின்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், நாடு முழுவதும் வீசிய மோடி அலையை, தமிழகத்தில் சற்றும் வீச விடாமல், துாள் துாள் ஆக்கி, தமிழகத்தின் 39 தொகுதகளில், 37ல் அ.தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்தார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அவரின் ஆளுமையும், அரசையும், கட்சியையும் நிர்வகிக்கும் திறனும் மக்களை கவர்ந்தன. எனவே தான், இந்தியாவிலேயே பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த, அரசியல் சாணக்கியர் என போற்றப்பட்ட கருணாநிதியை, முதல்வர் இருக்கைக்கு வர விடாமல், தொடர்ந்து இருமுறை அந்த பதவியை ஜெயலலிதாவால் பிடிக்க முடிந்தது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பின், தமிழகத்தில் இந்த சாதனை படைத்த ஒரே தலைவர் என்ற பெருமையும் ஜெ.,க்கு கிடைத்தது.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் ஜெ., மறைந்ததும், அவரது பெயரிலான அரசை தொடரும் இன்றைய ஆட்சியாளர்கள், சொல்லிக் கொள்ளும்படியான தலைவர்கள் இல்லாததால், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, மத்திய அரசுடன் சுமுகமான போக்கையே கையாண்டு வருவதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் பா.ஜ., வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, தமிழகத்தில் வலுவாக காலுான்ற முயற்சிப்பது அனைவரும் அறிந்தே. இரு கட்சிகளின் கூட்டணி குறித்து, தொடர்ந்து, பா.ஜ., தலைவர்கள் கருத்து கூறி வருவதும், அதற்கு அ.தி.மு.க., தலைவர்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காததுமே இதற்கு சான்று.
அதே போல், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஏனைய அமைச்சர்களும், மத்திய பா.ஜ.,அரசுக்கு சாதகமாவே கருத்து தெரிவித்து வருகின்றனர். பா.ஜ., மாநில தலைமையும், மாநில அரசின் செயல்பாடுகளை அவ்வப்போது பாராட்டி வருகிறது.
இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலுக்காக, இரு கட்சிகளிடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், தொகுதிப் பங்கீடு வரை இறுதி செய்யப்பட்டு, திரைமறைவில் வேட்பாளர் தேர்வும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாகத் தான், ஓ.பி.எஸ்., மகன், விருப்ப மனு பெற்றதாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கட்சியில் சீனியரான தன்னிடம் எந்த கலந்தாலோசனையும் நடத்தாமல், பன்னீரை கூட ஓரங்கட்டிவிட்டு, தனக்கு மிக நெருக்கமான அமைச்சர்களுடன், கட்சி சார்ந்த அனைத்து முடிவுகளையும், முதல்வர் எடப்பாடியே எடுப்பதாக கூறப்படுகிறது.
இதனால் எரிச்சல் அடைந்த தம்பித்துரை, கட்சியில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால், விரக்தியும், வேதனையும் அடைந்துள்ளதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே, கூவத்துார் சொகுசு விடுதியில் அரங்கேறிய அரசியல் நாடகத்தின் போது, தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என, தம்பித்துரை நம்பிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கொங்கு மண்டல அமைச்சர்களின் ஆதரவுடன், பெரும் தொகை செலவழித்து, முதல்வர் பதவிக்கான ரேசில், எடப்பாடி வெற்றி பெற்றதாகவும், தம்பித்துரைக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர் பதவியை பிடிப்பதில் எவ்வளவோ முயன்றும், பா.ஜ., விடம் உதவி கேட்டும் அது நடக்காததால், தம்பித்துரை, மத்திய அரசை தொடர்ந்து விமர்சிக்கும் முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை துவங்கி, விவசாயிகளுக்கான நலத்திட்ட அறிவிப்புகள் வரை, அனைத்திலும், மத்திய அரசு முறையாக செயல்படவில்லை எனக் கூறினார். ஜி.எஸ்.டி.,யில் கிடைக்கும் வரி வருவாயில், மாநிலங்கள் தங்கள் பங்கை பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதாக கூறிய அவர், தமிழகத்திற்கு தேவையான பேரிடர் நிவாரண நிதியை வழங்காமல், மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் கூறினார்.
தம்பித்துரையின் இந்த செயல்பாடுகள் குறித்து, அ.தி.மு.க., தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:
‛‛தனக்கு கிடைக்காத முதல்வர் பதவியை, வேறு யாரும் நிம்மதியாக அனுபவிக்கக் கூடாது என்பதில் தம்பித்துரை கவனமாக இருக்கிறார். அதனால் தான், மாநில அரசுக்கு சாதகமான முடிவுகளை எடுத்து வரும், மத்திய பா.ஜ., அரசை, அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
‛‛தனக்கு கிடைக்காத முதல்வர் பதவியை, வேறு யாரும் நிம்மதியாக அனுபவிக்கக் கூடாது என்பதில் தம்பித்துரை கவனமாக இருக்கிறார். அதனால் தான், மாநில அரசுக்கு சாதகமான முடிவுகளை எடுத்து வரும், மத்திய பா.ஜ., அரசை, அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
தன் சொந்த கருத்துக்களை கட்சியின் கருத்து போல் பேசி, மக்களவையில் தன்னிச்சையாக செயல்படுகிறார். கட்சியில் அவர் சீனியர் என்பதால், முதல்வரால் கூட அவரை கண்டிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், வரும் தேர்தலில், தம்பித்துரைக்கு சீட் வழங்கப்போவதில்லை என்ற முடிவில் தான் கட்சித் தலைமை தீர்க்கமாக உள்ளது.
இதை நன்கு உணர்ந்த தம்பித்துரை, தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு தான் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை என, தன் வாயாலேயே கூறினார். எனவே, காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ளவும் முடியவில்லை; இனி தனக்கு சாதகமாக காற்று வீசவும் போவதில்லை என்பதை உணர்ந்து, பிறர் பக்கம் வீசும் காற்றை சூறாவளியாக மாற்றவோ அல்லது காற்றே வீசாத வகையில் தடுப்பு அமைக்கவோ முயற்சித்து வருகிறார்.
ஒன்று அவரது பேச்சுக்களால் எரிச்சல் அடையும் பா.ஜ., தலைமை, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முடிவை கை விட வேண்டும். அப்படி இல்லையென்றால், தொடர்ந்து பா.ஜ.,வுக்கு எதிராக பேசி, அதன் மூலம், அதனுடன் கூட்டணி வைக்கும் அ.தி.மு.,மீது மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அதன் வாக்கு வங்கியை சிதைத்துவிட வேண்டும் என்பது தான், தம்பித்துரையின் பிரதான நோக்கமாக உள்ளது.
அதற்காகத்தான் அவர், தொடர்ந்து இது போல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். மக்களவையில், துணை சபாநாயகர் என்ற உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒருவர், இப்படி சாதாரண எதிர்க் கட்சி எம்.பி.,க்கள் போல் பேசுவது அவரின் நாகரிகமற்ற வஞ்சக எண்ணத்தையே பிரதிபலிக்கிறது’’
வெகு விரைவில் இவரது நீல சாயம் வெளுத்து விடும்.
#குதிரை_தொடர்ந்து_ஓடும்...>>>>
No comments:
Post a Comment