இந்த தேர்தல் MLA, MP தேர்தல் போல் அல்ல, கிராமங்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, விவசாயம், கழிவுநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை (நம் தலைவிதியை) தீர்க்கும் நமக்கான தேர்தல், இதில் சொந்த பந்தம், சாதி, மத பேதம், போன்ற விடைவிடையங்களை புறம் தள்ளி சமுக சிந்தனை உள்ளவர்களை தேர்ந்தெடுக்கவும். ஓட்டு போடும் முன் கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை தேடி வாக்களிக்கலாம்.
*#உங்களில்_ஒருவர்_யார்?? அவர்??*
ஊராட்சி நடைமுறை சட்டம் அறிந்தவரா??
தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிந்தவரா??
கிராமசபை செயல்பாடுகள் உணர்ந்தவரா??
மத்திய மாநில அரசின் திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு வருபவரா??
கிராம வளர்ச்சி திட்டங்களை வகுப்பவரா??
கிராம இயற்கை வளம் காக்க பாடுபடுபவரா??
மக்கள் நலனில் அக்கறை உள்ளவரா??
கிராம சுயாட்சி கொள்கை கொண்டவரா??
விவசாய வளர்ச்சிக்காக பயணிப்பவரா??
சூழியல் சீர்கேடுகளை களைய முற்படுபவரா??
சமூக ஒற்றுமை காக்க முனைபவரா??
சாதி மத பேதமற்ற சமூகம் காண விளைபவரா??
நீர்மேலாண்மையில் அக்கறை உள்ளவரா??
ஊராட்சி சொத்துக்களை பாதுகாப்பவரா??
ஊராட்சி மக்கள் நலனில் அக்கறை உள்ளவரா??
கிராம தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பவரா??
*யார் அவர்??*
சிந்திப்போம்!!
சிந்திப்போம்!!
உங்களை போல் மாற்றத்தை எதிர் நோக்கி....
இளைஞர்களை புது பாதையில் அழைத்து செல்பவரா!!
தொலைநோக்கு பார்வை உடையவரா,..
கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டவரா..!!?
வாக்கு அனைத்தும் ஊரின் எதிர்காலம் ....
No comments:
Post a Comment