ஓலா, ஊபர் போன்ற டாக்ஸி அப்ளிகேசன்களில் வாடிக்கையாளர்கள் புக் செய்யும் போது ஏற்றுக்கொண்டு வராமல் கேன்சல் செய்யும் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதிக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர்.
இந்தியா முழுவதும் ஓலா, ஊபர் போன்ற டாக்ஸி அப்ளிகேசன்கள் மூலம் டிராவல் செய்வது பரவலாக உள்ளது. ஆனால் வாடிக்கையாளர்கள் டாக்ஸி புக் செய்யும் போது அதை ஏற்றுக் கொள்ளும் ஓட்டுநர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருந்தால் அந்த அழைப்பை மறுத்து விடுகிறார்கள் அல்லது செல்லாமல் இருந்து விடுகிறார்கள். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இது குறித்து ஐதராபாத் போக்குவரத்து காவல்துறையினருக்கு புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து ஓட்டுநர்களால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக 'எந்த ஓட்டுநராவது அழைப்பை ஏற்றுக்கொண்டு வருவதாக கூறிவிட்டு வராமல் போனாலோ, தூரத்தை காரணம் காட்டி மறுத்தாலோ, கூடுதல் தொகை கேட்டாலோ' புகார் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள ஐதராபாத் காவல்துறை வாட்ஸப் எண் ஒன்றையும் அளித்துள்ளது. இது தொடர்பான புகார்களை அதன்மூலம் தெரிவிக்கலாம் என்றும் ஓட்டுநர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment