ஆஸ்திரியாவுக்கான இந்திய தூதர் ரேணு பால், இவருடைய பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அவர் மீது எழுந்த புகாரின் பேரில், மத்திய ஊழல் கண்காணிப்பு குழுவான சி.வி.சி. மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை விசாரணையை நடத்தியது. இந்த விசாரணையில் ரேணு பால், வீட்டு வாடகைக்காக மட்டும் மத்திய அரசின் அனுமதியின்றி கணக்கில் இல்லாத அளவுக்கு அரசு பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளது தெரிய வந்தது.
இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையிலான குழு சென்றது. அங்கு ரேணு பாலிடம் விசாரணை நடத்தியது. முதல்கட்ட விசாரணையில், விதிகளை மீறி அரசு நிதியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ரேணு பால் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து , ரேணு பால் நாடு திரும்புமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது .
No comments:
Post a Comment