பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து அடித்து விரட்டப்பட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்து அகதிகளாய் வாழ்ந்துவரும் ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு மிகப்பெரிய சோக வரலாறு புதைந்து கிடக்கிறது. பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தின் லாகியா மாவட்டத்திலுள்ள 150 சாக் பிடி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் திவ்யராமன். இங்கு இவருக்கு 6 ஏக்கருக்கு மேல் சொத்துக்களும், வீடுகளும், நில புலன்களும் இருந்தன. பாகிஸ்தானில் தனது தந்தையின் மரணத்தை தொடர்ந்து, பெனாசீர் பூட்டோ அரசியலில் ஈடுபட்டார். அப்போது அவர் திவ்யராமனின் தொகுதிக்கு வந்தார். அவரை வரவேற்று திவ்யராமன் உரை நிகழ்த்தினார். இதனால் பெனாசீர் பூட்டோ மனதில் திவ்யராமன் இடம் பிடித்தார். இதனால் திவ்ய ராமனுக்கு பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மையினருக்கான தனித்தொகுதியில் சீட் வழங்கினார் பெனாசீர் பூட்டோ. அதில் அவர் வெற்றி பெற்று எம்பி ஆனார்.
இதைத்தொடர்ந்து திவ்யா ராமனை முஸ்லிமாக மதம் மாறும்படி அங்குள்ள முஸ்லிம் மத வெறியர்கள் கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனக்கு சொந்தமான 6 ஏக்கருக்கும் அதிகமான சொத்துக்களையும், வீடு வாசல்களையும், விட்டு விட்டு குடும்பத்தோடு இந்தியாவிற்கு வந்து, இப்போது அகதியாய் வாழ்ந்து வருகிறார். 74 வயது திவ்யராமன், ஹரியானா மாநிலம் பெடக்பூர் மாவட்டத்திலுள்ள, பெடகாபாத் நகர் அருகே உள்ள ராட்டாங்கார் கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் இந்த வயதில் வேர்க்கடலை வியாபாரம் செய்து,தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். கோடைகாலத்தில் குல்பி ஐஸ் வியாபாரம் செய்கிறார். பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக உருவானதை தொடர்ந்து, திவ்யராமன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- நான் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணம் லாகியா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவன். எனக்கு சொந்தமாக 6 ஏக்கருக்கு அதிகமான சொத்துக்களும், நில புலன்களும், வீடு வாசல்களும் இருந்தன. பெனாசீர் பூட்டோ அரசியலுக்கு வந்ததை தொடர்ந்து அவர் என்னை அங்கு உள்ள சிறுபான்மையினருக்கான தொகுதி மூலம் எம்பி ஆக்கினார். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அதன் பிறகுதான் பல சோதனைகள் வந்தன. அங்குள்ள மதவெறி பிடித்த முஸ்லிம்கள், எனது குடும்பத்தில் உள்ள 12 பெயர்களையும் முஸ்லீமாக மதம் மாறும்படி கொடுமைப்படுத்தினர். ஒரு இந்துவாக நான் எம்பியாக இருந்ததை அந்த மத வெறியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திடீரென ஒருநாள் என் குடும்பத்திலுள்ள ஒரு சிறுமியை கடத்தி சென்று விட்டனர். 15 நாட்கள் அவள் எங்கு இருந்தாள் என்பதைகூட எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் நான் ஒரு எம்.பி. அதன்பிறகுதான், அவளை முஸ்லீம் மதவெறி கும்பல் கடத்தி உள்ளது என்பது தெரியவந்தது. இந்த பிரச்சனையை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் வரை கொண்டு சென்றேன். ஆனால் நீதிபதி என்னிடம், “நீங்கள், முஸ்லிமாக மதம் மாறி விடுங்கள். அல்லது அந்த முஸ்லிம் மத வெறியர்களுடன் சமாதானமாகப் போய் விடுங்கள்” என்றார். இந்த காலகட்டத்தில் எங்கள் வீடுகளில் புகுந்து எங்களை முஸ்லிமாக மதம் மாறும்படி எங்களுக்கு அவர்கள் செய்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. எங்களை மாட்டிரச்சி உண்ண வற்புறுத்தினார்கள். நாங்கள் முஸ்லிமாக மதம் மாற மறுத்ததால் மீண்டும் மீண்டும் நாங்கள் தாக்குதலுக்கு ஆளானோம்.சித்ரவதைக்கு ஆளானோம். கேட்பதற்கு யாரும் இல்லாத அனாதைகள் ஆனோம். இதனால் நிம்மதியை இழந்தோம். வாழ்கையே சூனியம் ஆகிவிட்டது. இதனால் நான் வேறு வழியில்லாமல் எனது எம்பி பதவியை ராஜினாமா செய்தேன். எனக்கு சொந்தமான சொத்துக்கள், வீடுகள் நில புலன்கள் அனைத்தையும் போட்டு விட்டு, நாங்கள் 12 பேரும் 2000-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்து விட்டோம். அப்போது நாங்கள் ஒரு மாத கால விசாவில்தான் வந்தோம். எங்களின் விசா காலாவதி ஆன பிறகு அரியானா மாநிலம் ரோக்டாக் நகர அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி நாங்கள் எந்த சூழ்நிலையிலும் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை என்று முறையிட்டோம். அந்த நேரத்தில் பஜ்ரங் தள் உள்பட இந்து அமைப்புகள் எங்களுக்கு மறுவாழ்வு பெற உதவின. அதிகாரிகள் நாங்கள் இங்கு அகதியாக வாழ அனுமதித்தனர். இப்போது எனக்கு 74 வயது ஆகிறது. நாங்கள் 12 பேரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். இந்தியாவுக்கு வந்து 13 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் ரேஷன் கார்டு இல்லை. அரசாங்கத்தின் எந்த உதவிகளும், உரிமைகளும் எங்களுக்கு இல்லை. குடி உரிமை இல்லை. இந்த நிலையில்தான் இதுவரை இருந்து வந்தோம். ஆனால் எனக்கு ஒரு அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை இருந்தது. என்றாவது ஒருநாள் ஒரு தலைவன் வருவான். அவன் எங்களுடைய பரிதாப நிலையை உணர்ந்து, எங்களின் வாழ்க்கைக்கு விளக்கேற்றுவான் என்று நம்பினேன். அது இப்போது பிரதமர் நரேந்திர மோடி வடிவில் நடந்துள்ளது. சட்ட ரீதியாக எங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கிறது. இது எங்களுக்கு மட்டுமல்ல, எங்களைப் போன்று சொந்த நாடுகளில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட ஏராளமான சிறுபான்மையினர் இதன் மூலம் பயன் அடைவார்கள். இதுவரை நாங்கள் மிகவும் கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். ஒரு நிலையற்ற சூழ்நிலையில்தான் எங்கள் வாழ்க்கை பயணம் இருந்தது. இப்போது எங்கள் வாழ்வில் ஒரு புது வசந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். இவ்வாறு திவ்யராமன் தனது சோகக் கதையை விவரித்துள்ளார். ஆனால் இதுபோன்ற 1.7 கோடி அகதிகளின் வாழ்க்கையைப் பற்றி ஒரு நொடிப் பொழுதுகூட யோசித்துப் பார்க்காமல், இந்த சட்டத்தை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அரசியலாக்கி, மத சாயம் பூசி, இந்த சட்டத்திற்கு எதிராக போராடுகின்றன என்பது வேதனையான உண்மை. =
ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி இந்த திராவிட திருட்டு திமுகவில் இருக்கும் இந்துக்கள் சிந்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment