கண்ணன் பேச்சின் பொருள் ' உங்களுக்கு யாரையாவது பிடிக்கலைன்னா குண்டு போட்டு கொன்னுடுவீங்களே, மோடி, அமீத் ஷாவைக் கொல்ல ஏன் இன்னும் தாமதம் ? சட்டுபுட்டுன்னு சோலிய முடிங்க.. என்பதுதான்.
இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் கொலைகாரர்கள் என்ற பிம்பத்தை கட்டமைப்பது யார் ?
இனி மோடி, ஷா உள்ளிட்டோர் மட்டுமல்ல, மாநில பாஜககாரர் யாராவது கூட்டத்தில் பேசும்போது அருகில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் ஏதாவது கோளாறால் பொறி பறந்தாலோ மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ உடனே சந்தேகம் உங்கள் மேல்தான் படியும். ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டாலோ விசாரணை உங்கள் அன்றாட வாழ்க்கையை, நிம்மதியை, தொழிலை, படிப்பை பாதிக்கும்.
அன்றும் நெல்லை கண்ணன் போன்றவர்கள் " தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. மின்சார வாரியத்தின் அலட்சியத்திற்கு , தமிழக அரசின் கையாலாகாத்தனத்துக்கு என் இஸ்லாமிய சகோதரனை துன்புறுத்துவதா, இவர்கள் பொங்கியெழுந்தால் என்ன ஆகும் தெரியுமா ? " என்று உசுப்பேற்றிவிட்டு, பேட்டா வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போய் நிம்மதியாய் உறங்குவார்கள். நீங்கள் போட்ட. பிரியாணி செரிக்கும்.
ஆனால் நீங்கள்தான் எந்த போலீஸ் வந்து யார் வீட்டுக் கதவை எப்போது தட்டுமோ, எவரைக் கைது செய்யுமோ என்று தூக்கம் கெட்டுத் தவிப்பீர்கள்.
உங்களை உசுப்பேற்றும் எவரும் உங்கள் வீட்டுத் திண்ணையில் காவலுக்கு படுக்க மாட்டார்கள்.
உங்களை உசுப்பேற்றும் எவரும் உங்கள் வீட்டுத் திண்ணையில் காவலுக்கு படுக்க மாட்டார்கள்.
பெருமைக்கு எருமை மேச்சது போதும். யோசிங்க.
No comments:
Post a Comment