குரு பெயர்ச்சி, ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி என்று ஒவ்வொரு பெயர்ச்சியும் மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போடுகிறதே! அப்படியென்றால் கிரகங்கள் தான் நம்மை ஆள்கின்றனவா?
12 ராசிகளில் மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனுசு மீனம் இந்த 6 ராசிகளுக்கு குரு செவ்வாய் சூரியன் சந்திரன் யோககாரகர்கள். இவர்களுக்கு சனிப்பெயர்ச்சியால் நன்மையும் கெடுதலும் கிடையாது.
ஏனைய 6 ராசிகளான ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் மகரம் கும்பம் ஆகியவைகளுக்கு சனி புதன் சுக்கிரன் யோககாரகர்கள் ஆவர். இவர்களுக்கு குருப்பெயர்ச்சியால் நன்மையும் கெடுதலும் கிடையாது.
இப்போது ஆராய்ந்து பாருங்கள்... ஏழரைச்சனி அஷ்டமச்சனி என்றவுடன் பதறுகிற சில ராசிக்காரர்கள் சனி 3 6 11ல் வரும்பொழுது ஏன் சாதனை படைப்பதில்லை...???
சாதிக்கிறார்கள்... அது யோக கிரகங்களின் பலத்தினை பொறுத்து, உதாரணமாக ரிஷப ராசிக்கு 1 2 5 6 9 10ஆம் இடத்தில் சனி சஞ்சாரம் நற்பலனையும்,
8 11 12ஆமிட சஞ்சாரம் சுப அசுப பலன்கள் கலந்தும்,
3 4 7ஆமிட சஞ்சாரம் அசுப பலன்களுடன் இருக்கும்...
இந்த ராசிக்காரர் மற்ற யோகாதிபதிகளான புதன் சுக்கிரன் நிலையை பார்க்க வேண்டுமே தவிர குருவின் பெயர்ச்சியை செவ்வாயின் பெயர்ச்சியை கண்டு யோக நேரத்தை தவறவிட வேண்டாம்.
இதே மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனுசு மீனம் ராசியை பார்த்தோமென்றால் சனி 3 6 11ல் சஞ்சாரம் செய்கையில் எத்தனை பேருக்கு சிறப்பாக இருந்தது என பார்க்கவும்...
மேலும் இந்த ராசிக்காரர்கள் ஏழரைச்சனி கண்டச்சனி அஷ்டமச்சனி காலத்தில் குரு செவ்வாய் கிரகங்களின் பலமான சஞ்சாரத்தினால் சாதித்தும் உள்ளனர்.
எனவே யோககாரனே பகை ராசியில் பலமிழந்து யோகம் தர இயலாதவராகி யோகமற்ற நிலையான கஷ்டகாலத்தை தோற்றுவிக்கிறார்.
ஆகையால் சனியை யோககாரகராக கொண்டவர்கள் சனி புதன் சுக்கிரன் ஆட்சி உச்சம் நட்பாகையில் நற்காலமாகவும் சமம் நீசமாகையில் மிதமான காலமாகவும் பகைபெறின் கடின காலமாகவும்,
குருவை யோககாரகராக கொண்டவர்கள் குரு செவ்வாய் சூரியன் சந்திரன் ஆட்சி உச்சம் நட்பாகையில் நற்காலமாகவும் சமம் நீசமாகையில் மிதமான காலமாகவும் பகைபெறின் கடின காலமாகவும் அறியவும்.
No comments:
Post a Comment