உடல் ஆரோக்கியமாக இருக்க நிம்மதியான உறக்கம் மிகவும் அவசியமாகும். எனவே இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற ஒரு இயற்கை வழி ஒன்று உள்ளது.
அதுதான் மூச்சுப் பயிற்சி....
மூச்சுப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும்?
** முதலில் கண்களை மூடிக் கொண்டு, நாக்கை வாயின் மேல் கூரையில் மேல்வாய் பற்களின் பின் புறத்தை நாக்கால் தொட வேண்டும்.
** நாக்கை சரியான நிலையில் தொட்ட பின், மூச்சை வாயின் வாயின் வழியாக வெளியேற்ற வேண்டும்.
** பின் வாயை மூடிக் கொண்டு, மூக்கின் வழியாக 4 வரை எண்ணிக் கொண்டே மூச்சை உள்ளிழுத்து, 7 வரை எண்ணிக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
** அதன் பின் மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும். இதேபோல் இரவில் தூங்கும் முன் தொடர்ந்து 4 முறைகள் செய்து வந்தால், இரவில் நல்ல தூக்கம் ஏற்படும்.
** இந்த மூச்சு பயிற்சியின் போது, முக்கியமாக மூச்சை இழுத்து வாயின் வழியாக வெளியிட வேண்டும். இதனால் மன அழுத்தம் குறையும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
No comments:
Post a Comment