மறுபடியும் News 18 தமிழ்நாடு!
ஆனால், ஆள் வேறு.
இந்த முறை நெறியாளர் (?) செந்தில்.
குணசேகரன் அவர்களைப் போலவே, இந்த செந்தில் அவர்களும் நெறியாளராய் இருப்பதற்கானத் தகுதி அற்றவர். நடுநிலை வகிப்பதில்லை என்பதைத் தாண்டி, நாகரிகமும் இல்லாதவர்.
தி.க.வின் மதிமாறன் எப்படி நக்கல் செய்வது மட்டும் தான் விவாதம் என்று நினைத்துப் பேசுவாரோ, அதேபோல் செந்திலும் செயல்படுகிறார்.
ஒரு நெறியாளர் என்பவர், ஒருவரை நோக்கி கேள்விக் கேட்கும்போது, எதிர் தரப்பினரின் கேள்விகளைத் தனது கேள்விகளாக வைக்கலாம். ஆனால், அவற்றை நாகரிகமாக வைக்க வேண்டும். இந்த செந்தில் நக்கலாக வைக்கிறார். அதனை சகிக்க முடியவில்லை! அருவருவருப்பாக இருக்கிறது!
இப்போதெல்லாம் அரசியல் கட்சிகளை சார்ந்த சிலர் கூட, விவாதங்களில் அடுத்தவர் பேசும்போது அமைதி காக்கின்றனர். ஆனால், செந்தில், குணசேகரன் போன்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் / இந்து இயக்கத்தினர் பேசும்போது மட்டும் வரிக்கு வரி குறுக்கிடுகிறார்கள். எந்தவொரு கேள்விக்கும் முழுவதுமாக விடையளிக்கும் முன்னே அடிக்கடி குறுக்கிட்டு வேறுவேறு விஷயங்களைப் பேசுகின்றனர்...
இவர்களின் நோக்கம் பழுதாக இருக்கிறது. இவர்களின் மோடி விரோத, பாஜக விரோத, இந்து விரோத, ஈ.வெ.ரா. ஆதரவு நிலைப்பாடுகள் அப்பட்டமாகத் தெரிகின்றன. நெறியாளருக்கான தர்மத்தை இவர்கள் கிஞ்சித்தும் கடைபிடிப்பதில்லை...
நேற்று (26-12-2019) நடந்த 'காலத்தின் குரல்' விவாத நிகழ்ச்சியின் போது செந்தில் நடந்துகொண்ட விதம் அநாகரிகத்தின் உச்சம்! சாதிய வன்மம்!
அதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது!
அந்த தருணத்திலும் கூட, மிகவும் நிதானமாகவும் நாகரிகமாகவும் தனது எதிர்ப்பினைப் பதிவு செய்தார் K.T. ராகவன் அவர்கள்! கொஞ்சம்கூட தரக் குறைவாக நடந்துகொள்ளவில்லை! Education is the ability to listen to almost anything without losing your temper or self-confidence. இந்தக் கூற்றுக்கிணங்க நடந்துகொண்டார் KTR. Hats off ji! U r really a learnt, matured and civilized personality!
மூளை முழுவதும் சாதி வெறி பிடித்திருக்கிற செந்தில், KTRன் எதிர்ப்பிற்குப் பின், 'நான் அந்த வார்த்தையை withdraw பண்ணிக்கிறேன்; வருத்தம் தெரிவிச்சிக்கிறேன்' என்று மட்டும் சொல்கிறார். மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூட சொல்லவில்லை!
ஆனால், KTRன் தீர்க்கமான எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், 'நான் மன்னிப்புக் கேட்டுவிட்ட பின்பும் அதையே பேசிக்கொண்டிருந்தால் எப்படி?' என்று பொய் உரைக்கிறார்!
ஏன் இந்தப் பித்தலாட்டம்?
ஏன் இந்தப் பித்தலாட்டம்?
தமிமுன் அன்சாரி பாய் அவர்களும் செந்திலுக்கு ஒத்தூதுகிறார். 'அவர் தான் மன்னிப்புக் கேட்டுவிட்டாரே, விட்டுவிடுங்கள்' என்கிறார். கேட்காத மன்னிப்பைக் கேட்டுவிட்டதாக செந்திலும் சொல்கிறார், பாயும் சொல்கிறார்!
செந்திலின் சாதிரீதியிலான பேச்சைக் கண்டித்து தமிமுன் அன்சாரி பாயோ, விவாதத்தில் கலந்துகொண்ட கம்யூனிச சார்பு பத்திரிகையாளர் மணி அவர்களோ ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை! இவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழக ஊடகங்களில் எவர் எவரெல்லாம் நடுநிலை தவறி செயல்படுகிறார்களோ, அவர்களைப் பற்றி, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நாம் E-mail, telephone அல்லது கடிதம் மூலம் புகார் அளிக்க வேண்டும். தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், உங்களது ஊடகங்களைப் புறக்கணிப்போம் என எச்சரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment