அவர் பெயர் ராகவேந்த்ரா. போலீஸ்காரர்.
தனியாளாக அவர் ஒரு மசூதிக்குள் செல்கிறார்.
அங்கே, தொழுகைக்கு கூடியிருக்கும் 3000 முஸ்லீம்களின் முன் நின்று தெளிவாய், தைரியமாய்ப் பேசுகிறார் :
"நண்பர்களே..! குடியுரிமைச் சட்டத்தினால் இந்தியர்கள், எந்த மதத்தைச் சேர்ந்தவருக்கும், பாதிப்பே இல்லை..! அது, பாகிஸ்தான், பங்களாதேஷிலிருந்து இங்கே சட்டவிரோதமாகக் குடியேறி, இந்தியாவின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கலாம் என்று நமக்கு சந்தேகம் இருப்பவர்களை மட்டும், நேரமெடுத்து ஆராய்ந்து, அதன் பின் அவர்கள் இங்கே குடிமகனாய் தொடர அனுமதிக்கும் சட்டம் மட்டுமே..! நல்லவர்களுக்கும், பிறப்பால் இந்தியர்களுக்கும், இதனால் ஒரு பாதிப்புமில்லை..! உங்களுக்கு இதில் எந்தச் சந்தேகம் இருந்தாலும் என்னைக் கேளுங்கள்.. நான் விளக்குகிறேன்..!"
அங்கே உள்ளவர்கள் சந்தேகங்கள் கேட்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அவர் விளக்கமாய் பதில் அளித்து, தொடர்கிறார்:
"உங்களிடைய பொய் வதந்திகளைப் பரப்பும் தீயவர்களை அடையாளம் கண்டு நீங்கள் ஒதுக்குங்கள்..! என்னிடம் புகார் அளியுங்கள்..! அந்தப் பொய்யுரைகளை நம்பி தயவு செய்து பதட்டப்படாதீர்கள்..! இது 'நம்' எல்லோரின் நாடு..! குடியுரிமைச் சட்டத்தால் 'இந்தியர்கள் நமக்கு' எந்த விதமான பாதிப்பும் இல்லை..! இல்லை..! இல்லை..!"
உண்மையை உணர்ந்து கொண்டு, அங்கே இருக்கும் முஸ்லீம் சகோதரர்கள், ராகவேந்தராவிற்குக் கை தட்டுகிறார்கள்..!
^^^^^^
இது நடந்தது கர்னாடகாவில்..!
அந்தப் போலீஸ்காரருக்கு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment