Monday, December 30, 2019

இந்த ஆண்டின் இறுதி நாள் இன்று…..

வாழ்நாளில் ஒரு வருடத்தை நழுவ விட்டுவிட்டோமா?
அல்லது பனிரெண்டு மாதங்களையும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டோமா?
என்று சிறிது நேரமாவது சிந்திக்க வேண்டிய நாள் இது.
“அப்பாடா, ஒரு வருடம் ஓடிவிட்டதே” என்று பெருமூச்சு விடுபவர்களுக்கும்,
“அநியாயமாக ஒரு வருடம் போய்விட்டதே” என்று வருத்தப்படுவர்களுக்கும்
மத்தியில்-“என்னைத் தினமும் கிழித்தாயே, நீ என்னைத்தைக் கிழித்தாய்?”
என்று காலண்டர் கேட்கும்படி ஒரு வருடம் ஓடியதா?
அல்லது-
“காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு பெருமைப்படும்படி காலண்டர் தீர்ந்ததா?”
என்கிற கேள்விக்கு விடை தேடும்போது……
சராசரி வாழ்க்கையைத்தான் நாம் சந்தித்திருக்கிறோம் என்பதை வலியுடன் உணரமுடிகிறது.
இழந்த நிமிடங்களும், மணித்துளிகளும் என்ன விலை கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாதவை என்பதை உணரமறுக்கிறோம்.
வாழ்வின் கடைசிக் கட்டத்தில்தான் அதன் வலி தெரிகிறது.
வலி தெரிகிற போது வழி தெரிவதில்லை.
மண்ணோடு போராடித்தான் மரமாகிறது விதை என்பதை மனதில் வைப்போம்.
2020 – இனிய திருப்பமாக அமையட்டும்.
வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...