ஊடகங்களை திமுக விலைக்கு வாங்கிவிட்டது .. நெறியாளர்கள் விலை போய்விட்டார்கள் ..பாஜகவை எதிர்க்க லட்சங்கள் கை மாறின ..இதைப் போன்ற பாஜகவினர் பதிவுகளை எல்லாம் பார்க்கும் போது கோபம் தான் வருகிறது ...
உண்மையில் அவர்கள் எல்லாம் விலை கொடுத்து வாங்கப்பட்ட வ.ர்கள் அல்ல ... இடதுசாரி அல்லது மிஷனரி சித்தாந்த விதைகளில் விளைவிக்கப் பட்டவர்கள் ... அவர்களை நீங்கள் கோடிகள் கொடுத்தோ.. விருந்துகளுக்கு அழைத்து கௌரவப்படுத்தியோ உங்கள் பக்கம் ஒரு சென்டிமீட்டர் கூட சாயவைத்து விட முடியாது..
அது எப்படி என்பதற்கு நான் இங்கு மூன்று சம்பவங்களை சுட்டிக் காட்ட உள்ளேன் ..
1)நான் ஒரு சிறு ஊடக செய்தி ஆசிரியராக பணிபுரிந்த 2009 2010 2011 ஆம் வருடங்களில் ஒரு கல்லூரி விசுவல் மீடியா பிரிவைச் சேர்ந்த மாணவிகள் ஒரு மாத தேர்வுப் பயிற்சிக்காக என்னிடம் வந்தனர் ..கிட்டத்தட்ட 50 மாணவிகளுக்கு மேல் வந்ததில் ஒரே ஒரு மாணவி மட்டும் தான் இந்து..
காரணம் ஊடகப் பணி என்பதன் பலம் மற்றும் பயன் குறித்து இந்து இயக்கங்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை ..கூட்டத்தோடு கூட்டமாக ஓம் காளி ஜெய் காளி போடும் ஒரு தொண்டனை தான் இந்து இயக்கங்கள் தேடுகின்றனவே தவிர தங்கள் ஒரு பத்து நபர்களின் கருத்தை 10,000 நபர்களின் குரலாக காட்டும் ஊடகவியலாளனை அல்ல...
2)இன்னொரு முறை மல்டிமீடியா தெரிந்த இளைஞர்கள் வேலைக்கு தேவை என விளம்பரம் செய்த போது நூறைத் தொடும் அளவு விண்ணப்பங்கள் வந்தன.. இத்தனை பேர் எப்படி மல்டிமீடியா படித்தனர் என்று விசாரித்தபோது சர்ச் வழங்கிய அறிவுரை படி படித்ததாக சொன்னார்கள் .. ஊடகங்கள் மூலம் இயேசுவை உலகெங்கும் எடுத்துச் செல்வோம் என்ற ரோம் அறிவுரையின்படி நாடு முழுவதும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு. இளம் பெண்களுக்கு ஊடகத்தில் கல்விக்கான முக்கியத்துவம் குறித்து போதிக்கப்பட்டு ஊடகங்களை நோக்கி அவர்கள் வழி படுத்தப்பட்டனர் ..
3) ஊடகங்களில் ஆரம்பக்கட்டத்தில் வழங்கப்படும் மூன்றாயிரம் நான்காயிரம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளங்களை பெரும்பாலான இந்து இளைஞர்கள் அல்லது அவர்களின் குடும்பங்கள் ஏற்பதில்லை.. அந்தப் பணிகளின் அலைச்சல் சிரமங்களுக்கு பின்னால் இருக்கும் எதிர்கால பலன்கள் குறித்து யாரும் அவர்களை சிந்திக்க விடுவதில்லை ..அதையும் தாண்டி ஊடகங்களில் இருப்பவர்களை இந்து இயக்கத்தினர் ஊக்கப்படுத்துவது இல்லை .. அவர்களை ஒருங்கிணைக்கவும் பின்னாலிருந்து இயக்கவும் எந்த இந்து இயக்கங்களும் இல்லை என்பதால் அவர்கள் இடதுசாரி அல்லது மிஷினரி நாத்திக சிந்தனை சார்ந்த கலை இலக்கிய ஊடக குழுக்களுடனே பயணிக்க வேண்டியுள்ளது...
இப்படி ஊடகத்தினர் குறித்து எந்த சிந்தனை திட்டமிடல்களும் இன்றி ..இடதுசாரி நாத்திக மிஷினரி சிந்தனை வேர்களுடன் ஊடகங்களில் வந்து அமரும் நெறியாளர் களுக்கு வளைந்து கொடுத்து தன்னை விளம்பரம் செய்தாலே போதும் என நினைக்கும் பாஜக நிர்வாகிகளை நிறைத்து வைத்துக்கொண்டு .. இங்கே ஊடகங்கள் விலை போய்விட்டன என அர்த்தமில்லாமல் கதறுவதில் என்ன பயன் ?
1)முதலில் நீங்கள் பொத்தம் பொதுவாக ஊடகங்களை ஒதுக்காமல் குறிப்பிட்ட நெறியாளர்கள் நிகழ்ச்சிகளை புறக்கணியுங்கள் ..99% மதநம்பிக்கை உள்ள மக்கள் வாழும் நாட்டில் 99% மத நம்பிக்கை இல்லாத இந்து மத நம்பிக்கையை புண்படுத்தும் நாத்திகர்கள் எப்படி நெறியாளர்கள் ஆனார்கள் என அவர்களது ஊடக முதலாளிகளை கேள்வி கேளுங்கள்..
2) மாலன் நாராயணன். பானு கோமஸ்.கோகுல ஸ்ரீனிவாஸ். எஸ் வி சேகர் உள்ளிட்ட இந்துத்துவ சிந்தனையாளர்களை சார்ந்து பல்வேறு கலை இலக்கிய ஊடக அமைப்புகளை தொடங்குங்கள்.. அதன் சார்பில் தேசிய சிந்தனை வாய்ந்த ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்களை கௌரவியுங்கள்.. பிரதமர் உள்துறை அமைச்சர் ராணுவ அமைச்சர் நிதி அமைச்சர் குடியரசுத் தலைவர் ஆகியோரை விழா சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியம் சார்ந்து செயல்படுபவர்களுக்கு விருதுகள் பரிசுகள் பட்டங்கள் வழங்குங்கள் ...
3) ஊடகவியலாளர்கள் ஊடக பணிகளில் ஆர்வம் உள்ளவர்கள் என இரண்டு பிரிவுகளாக பயிற்சி அளியுங்கள் ...பயிலரங்கம் கருத்தரங்கம் ஆய்வரங்கம் பட்டறை என தேச பணிக்கு அவர்களை தயார் செய்யுங்கள்.. வருடம் தோறும் மாவட்டத்தில் 10 இளைஞர்களுக்கு இதற்காக ஒரு பெரும் தொகையை கல்வி நிதியாக வழங்குங்கள் ..
இப்படி ஒரு இளம் தலைமுறையை வளர்த்து உருவாக்கி எடுங்கள் ..தேசத்தையும் தெய்வத்தையும் காக்கின்ற பணியில் அவர்கள் உயிர் போனாலும் விலை போகமாட்டார்கள்..கோடிகள் கொடுத்தாலும் தேசத்தின் மீது ஒரு தூசு பட விடமாட்டார்கள் ..
No comments:
Post a Comment