Monday, December 30, 2019

இந்த தகவல் எல்லாமே கடந்த இரண்டு ஆண்டுகள் கிராம சபை நடக்குறதனால நமக்கு தெரியுது.

4000 ஓட்டுகள் கொண்ட ஒரு ஊராட்சியில் ஒரு ஓட்டுக்கு 300 ருபாய் கொடுக்க ஒரு வேட்பாளர் தயாராக இருக்கிறார் என்றால்
கோவில் கட்ட எத்தனை இலட்சம் வேண்டுமானாலும் கொடுக்க தயாராக ஒரு வேட்பாளர் இருக்கிறார் என்றால் அவருடைய முதலீடு எவ்வளவு இருக்கும் என சிந்தித்து பாருங்கள். இத்தனைக்கும் இத்தனை இலட்சம் செலவு செய்தாலும் வெற்றி என்பது யாரோ ஒருவருக்குத்தான் என தெரிந்தும் அத்தனை இலட்சங்களை ஏன் உள்ளாட்சி தேர்தலில் இறக்குகிறார்கள்?
மாதம் ஐந்தாயிரம் ருபாய் கூட சம்பளம் இல்லாத ஊராட்சி தலைவர் பதவிக்கு ஏன் இத்தனை இலட்சங்களை குவிக்கிறார்கள்?
வெற்றி மட்டும் உறுதி என தெரிந்தால் ஓட்டுக்கு ஆயிரம் ருபாய் கூட கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.
அப்படி என்ன தான் உள்ளது இந்த பஞ்சாயத்து ல ன்னு நீங்க யோசிக்கலாம்.
ஆனா உண்மை நிலவரம் என்னன்னு இந்த கிராம சபை கூட்டத்துக்கு போனவங்களுக்கு தெரியும்.
ஆண்டுக்கு இவ்வளவு பணம் நம்ம ஊராட்சிக்கு ஒதுக்குறாங்களான்னு நீங்க ஆச்சரியப் படுவீங்க.
குடிநீர், தெரு விளக்கு, சாலை பராமரிப்பு ன்னு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவே ஒரு ஊராட்சிக்கு ஆண்டுக்கு 50 இலட்சம் ருபாய் க்கு மேல நிதி ஒதுக்குவாங்க.
இது இல்லாம புதிதாக சாலை போடுதல் பள்ளிக்கூடம் கட்டுதல் ன்னு பல இலட்சம் நிதி ஒதுக்குவாங்க.
இந்த தகவல் எல்லாமே கடந்த இரண்டு ஆண்டுகள் கிராம சபை நடக்குறதனால நமக்கு தெரியுது.
அது என்ன திடீர் னு இப்போ ரெண்டு வருசமா கிராம சபை நடக்குது? கிராம சபை நடத்தனும் னு இப்ப தான் சட்டம் கொண்டு வந்தாங்ளா அப்படின்னு நீங்க யோசிக்கலாம். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எல்லாம் எங்க ஊர்ல எந்த கிராம சபையும் நடக்கலையே ன்னு நீங்க நெனைக்கலாம்.
1984 ல யே கிராம சபை தொடர்பான சட்டத்தை இயற்றி எல்லா பஞ்சாயத்து ல யும் கிராம சபை கூட்டத்த தவறாம நடத்தனும் னு இந்திய பாராளுமன்றம் ல 73 பிரிவு ல சட்டம் இயற்றுனாங்க.
அப்போ 1984 ல இருந்து கிராம சபை நடந்துட்டு இருக்கா அப்படின்னா
ஏட்டளவு ல நடந்துட்டு இருந்தது. மக்கள் கிட்ட ஏதோ ஒரு பேர் ல கையெழுத்து வாங்கிட்டு கிராம சபை ன்னு கணக்கு காட்டிடுவாங்க.
அது எப்படிங்க சாத்தியம் தமிழ்நாட்டுல 12524 ஊராட்சி இருக்கு. ஆண்டுக்கு 4 முறை கிராம சபை நடத்தனும் னு சட்டம் இருக்கு. இத்தனை ஊராட்சி லயும் கிராம சபை நடத்தாம அது எப்படி கிராம சபை நடந்த மாதிரி கணக்கு காட்ட முடியும்? இதெல்லாம் நம்பற மாதிரி இல்லையே ன்னு நீங்க யோசிக்கலாம்.
ஆனா நீங்க அரசாங்க பதிவேடுகளை பார்த்தா உங்களுக்கே புரியும்.
சரி கிராம சபையை நடத்தறதனால ஊராட்சி தலைவருக்கு என்ன பிரச்சனை ன்னு நீங்க கேக்கலாம்.
ஊராட்சி ல நடக்குற ஒவ்வொரு ருபாய் செலவுக்கும் கிராம சபைல கணக்கு காட்ட வேண்டும். கிராம சபைல கேள்வி கேக்குற ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒவ்வொரு ருபாய் செலவுக்கும் தலைவர் பதில் சொல்ல வேண்டும். அரசு அலுவலர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அப்புறம் எப்படி ஓட்டுக்கு 300 ருபாய் கொடுக்க முடியும்? அவர்கள் எப்படி திருட முடியும்? அதனால் கிராம சபையை நடத்தாமலேயே கையெழுத்து வாங்கிக் கொண்டு நடத்தியது போல் கணக்கு காட்டி விட்டார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் அளவில் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட முயற்சியால் 12524 ஊராட்சிகளிலும் கிராம சபை முறையாக நடைபெறுகிறது.
கிராம சபையில் அனைத்து வாக்காளர்களும் ஊராட்சி தலைவரை ஒத்த ருபாய்க்கும் கணக்கு கேட்கும் சூழல் உருவாகி உள்ளது. கிராம சபைக்கு அனைத்து அரசு அலுவலர்களும் கட்டாயம் பங்கு கொண்டு இலஞ்சம் இல்லாத பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் நம்பிக்கை எழ செய்துள்ளது. ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2 என நான்கு நாட்களில் கிராம சபை மூலமாக ஊராட்சியின் நிர்வாகம் மக்களுக்கு தெள்ளத் தெளிவாகிறது. ஊராட்சியின் வரவு செலவு கணக்கை மக்களே படித்து தெரிந்து கொள்கின்றனர். அரசாங்கம் மூலமாக ஆடு மாடு கோழி ன்னு எது கொடுத்தாலும் அந்த பயனாளிகளையும் கிராம சபை மூலமாக மக்களே தேர்வு செய்கின்றனர். ஊராட்சி தலைவரின் பணி அரசு திட்டங்களை கிராம சபையில் மக்களுக்கு தெரிவிப்பதும், கிராம சபை மூலமாக மக்களால் தேர்வு செய்த பயனாளிகளை அரசாங்கத்துக்கு தெரிவிப்பதுமே ஆகும். ஒரு ருபாய் ஊழல் செய்தாலும் கிராம சபையில் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
சரி வருசத்துல அந்த 4 கிராம சபையை சமாளிச்சிட்டா போட்ட முதல எப்படியாவது எடுத்துடலாம்னு நெனைக்கலாம்.
ஆனா கிராம சபையின் வலிமை மிக அதிகம். மக்கள் நினைத்தால் கிராம சபையையே ஒத்தி வைக்க முடியும். ஒத்தி வைத்த கிராம சபையை மீண்டும் நடத்தியே ஆக வேண்டும் என சட்டம் கூறுகிறது. மக்களின் ஒப்புதல் இல்லாமல் கிராம சபையை நடத்தவும் முடியாது.
சரி தலைவருக்கு வேண்டப்பட்டவங்க 10 பேர வச்சி கிராம சபையை சுமூகமா நடத்திடலாமே ன்னு யோசிக்கலாம்.
ஆனா கிராம சபை நடத்தறதுக்கு நெறைய விதிமுறை இருக்கு. 7 நாள் முன்னாடி ஊராட்சி மக்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கனும். கிராம சபையில் விவாதிக்கும் பொருளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஒரு ஊராட்சியில் 4000 வாக்காளர்கள் இருந்து 2000 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வந்தால் அத்தனை பேரும் சமமாக அமர்ந்து அத்தனை பேருக்கும் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு உட்பட அத்தனை தகவலையும் அளித்து அனைவரின் கேள்விகளுக்கும் பதில் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஊராட்சி தலைவருக்கு உள்ளது.
சிந்திப்போம்.
வாக்காளர்கள் மட்டுமல்ல
வேட்பாளர்களும் சற்று சிந்திப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...