Wednesday, December 25, 2019

அழிவை தந்த 'ஆழிப்பேரலை' - இன்று சுனாமி நினைவு தினம் -

இந்திய மண்ணில் 'சுனாமி' ஏற்படுத்திய சோகம் மக்களின் மனதை விட்டு இன்னும் மறையவில்லை.

2004 டிச., 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில்
நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்துஎழும்பிய ஆழிப் பேரலைகள் இந்தோனேஷியா,
இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோர பகுதிகளை வாரி
சுருட்டியது. இதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
உயிர் சேதத்துடன், கோடிக் கணக்கில் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முன் சுனாமி என்ற வார்த்தையை இந்தியர்கள் கேள்விப்பட்டதில்லை. 'கடல் அலை' ஊருக்குள் வந்த போது தான் 'சுனாமி' என தெரிந்தது. இதன் கோபம் வெறும் பத்து நிமிடம் தான். அது
ஏற்படுத்திய சோகம் என்றும் அழிவதில்லை.


ஏற்படும் விதம்

'சுனாமி' என்பது ஜப்பானிய மொழி சொல். 'துறைமுக அலை' எனப் பொருள். 'ஆழிப்பேரலை'
எனவும் அழைக்கப்படுகிறது. நிலநடுக்கம் மூன்று விதங்களில் ஏற்படுகிறது. தரைப்பகுதியில் ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் தரைமட்டமாகின்றன. மலைப்பகுதியில்
ஏற்படும்போது எரிமலை உருவாகிறது. இதுவே கடலில் நிலநடுக்கம் ஏற்படும் போது, 'சுனாமி'
எனும் ஆழிப்பேரலை உருவாகிறது.


தமிழகம் அதிகம்

இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரியை 'சுனாமி' தாக்கியது. 12,000 பேர்
பலியாகினர். இதில் 7,000 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலுார், கன்னியாகுமரி பாதிக்கப்பட்டன. இதன் தாக்கம் இன்றும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை.
 அழிவை தந்த 'ஆழிப்பேரலை'  - இன்று சுனாமி நினைவு தினம் -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...