Sunday, February 2, 2020

" திருவெறும்பூர்_காவல்_ஆய்வாளர்_சண்முகசுந்தரம் "

#திருச்சி_திருவெறும்பூர்_காவல்_ஆய்வாளர்_சண்முகசுந்தரம்_அவர்களுக்கு_வாழ்த்துகள்__பாராட்டுக்கள்...!!!
கடந்த வியாழக்கிழமை மாலை 6மணி திருச்சி BHEL காவல்துறை ஆய்வாளர் சண்முக சுந்தரம் அவர்களின் செல்போன் ஒலிக்கின்றது.. எடுத்துப் பேசிய சண்முக சுந்தரம் அப்படியா!! ஓக்கே!! சரி!! இதோ கிளம்பிட்டேன்!! "கமான் கெய்ஸ் கமான்" என்கின்ற கட்டளை இட்டவாறு காவல்நிலையம் அருகே உள்ள சாலையை சென்றடைகின்றார்..
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை BHEL பகுதியில் பேரிக்கார்டுகளில் காவல்துறையினர் பலப்படுத்தப்பட்டு வாகன தணிக்கை துவங்குகின்றது... அவர் எதிர்பார்த்த அந்த வெள்ளை நிற டாடா சுமோ பேரிக்கார்டை நெருங்குகின்றது.. கெய்ஸ், அந்த வண்டி தான் மடக்குங்க மடக்குங்க என உத்தரவிட்டவாரு நெருங்குகின்றார்... ஆனால், காவல்துறையினரின் தடைகளை மீறி நிற்காமல் மின்னல் வேகத்தில் கடந்து செல்கின்றது அந்த வாகனம்..
பரணி, சீக்கிரமா வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க, அந்த வண்டியை புடுச்சே ஆகனும் கமான் சீக்கிரம் சீக்கிரம் என்றவாறு அவரது பெட்ரோலில் ஏறுகிறார்.. மாலை 6 மணி நேரம் என்பதால் பள்ளி,கல்லூரி மாணவர்கள், அலுவலக பணிமுடிந்து வரும் பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி வரும் பயணிகள் என பரபரப்பாக அந்த எக்ஸ்பிரஸ் சாலையில் எதை பற்றியும் கவலைபடாமல் சீறிச்செல்லும் அந்த வாகனத்தை, அனைத்தையும் மேலதிகாரியின் கட்டளை, சூழ்நிலை என அனைத்தையும் கருத்தில் கொண்டு நேர்த்தியாக துரத்திச் செல்கிறார் ஓட்டுனர் பரணிதரன்..
பெல், கணேசா ரவுண்டானா, திருவெறும்பூர் பேருந்து நிலையம், கல்லணை பிரிவு சாலை என துரத்தலும், நெருங்கலுமாய் தொடர்கின்றது.. இறுதியில் மலைக்கோவிலில் அந்த வாகனத்தை மடக்கி பிடித்து 6.10க்கு அனைவரையும் கைது செய்கின்றார் ஆய்வாளர் சண்முக சுந்தரம் அவர்கள்..!
மாலை 6 மணிக்கு முன்பு:-
துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், மாலை பணி முடிந்து பேருந்துக்காக துவாக்குடி பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கின்றார்.. அப்போது வெள்ளைநிற டாடாசுமோவில் வந்த மர்மநபர்கள் நான்கு பேர் அந்தபெண்ணை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றிச்செல்வதை பார்த்த சிலர் துவாக்குடி காவல்நிலையத்திற்கு தகவல் தருகின்றனர்.. வண்டி Bhel நோக்கி செல்வதை அறிந்த துவாக்குடி காவல்துறையினர், BHEL ஆய்வாளர் சண்முக சுந்தரம் அவர்களுக்கு தகவல் தருகின்றனர்...
அவரும் உடனடியாக துரிதமாக மின்னல் வேகத்தில் செயல்பட்டு கடத்தப்பட்ட சில நிமிடங்களில் அந்த பெண் ஊழியரை மீட்டு, கூலிப்படையினரையும் கைது செய்துள்ளார்...
கடத்தல் எதற்கு?? ஏன்?? என காவல்துறை விசாரித்துக் கொள்ளட்டும்.. ஆனால் சினிமாவில் நிகழ்ந்ததை போல் இந்த சம்பவம் துவாக்குடி, BHEL, திருவெறும்பூர் பகுதி பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
நல்ல விஷயங்களை நாமும் பதிவோம், பாராட்டுவோம் ஆய்வாளர் சண்முக சுந்தரம் அவர்களுக்கும், ஓட்டுனர் பரணிதரனுக்கும் நமது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...