ஜெயலலிதா அம்மையாரின் பெயரைப் பயன்படுத்தி மன்னார்குடி மாஃபியா கும்பல் கொள்ளையடித்த சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ளார். இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை உள்ளது என்கின்றனர். மேலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் திருமணம் வரும் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளதால் இந்த திருமணத்தில் சசிகலா கலந்து கொள்ள பரோலில் வர வாய்ப்பு உள்ளதாக சொல்கின்றனர்.
இந்த நிலையில், தண்டனை காலம் முடியும் முன்பே சசிகலா சிறையில் இருந்து வெளிவருவார் என்று தினகரன் கும்பல் வதந்தி பரப்பி வந்த நிலையில் உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்தை சசிகலா செலுத்த தவறினால் அவருக்கு தண்டனை மேலும் ஒராண்டு நீடிக்கப்படும் என்று பெங்களூரு சிறைத்துறை வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இதனால், அவரது தண்டனை காலம் நீடிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா தரப்பு கொள்ளையடித்த பணத்தில் பத்து கோடியை கட்டிவிட்டு 2021 பிப்ரவரி மாதத்தில் வெளிவருவதா...
அல்லது இன்னும் ஒரு ஆண்டு சேர்த்து ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு அதன்பிறகு 2022 பிப்ரவரி மாதத்தில் வெளிவருவதா...
என குழப்பத்தில் இருக்கிறது இந்த கொள்ளைக்கும்பல்..
அல்லது இன்னும் ஒரு ஆண்டு சேர்த்து ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு அதன்பிறகு 2022 பிப்ரவரி மாதத்தில் வெளிவருவதா...
என குழப்பத்தில் இருக்கிறது இந்த கொள்ளைக்கும்பல்..
No comments:
Post a Comment