வரும் February மாதம் 16 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமி வருகிறது.
அந்த நன்னாளில்
ஈசன் மூங்கில் வனத்தில் சுயம்புவாக உதித்த, உலகின் முதல் கல்லணையை கட்டிய கரிகாலசோழன் முதலான மன்னர்களுக்கு லாம் காட்சி கொடுத்த 1] திருப்பாச்சூர் வாசீஸ்வரர் ஆலய தரிசனம்
பஞ்ச சபைகளில் மூத்த சபையாக விளங்கும் ரத்தின சபையிலே அந்த பரமசிவனாலேயே அம்மையே என்று அழைக்கப்பட்ட உலகின் ஒரே சிவனடியார் காரைக்கால் அம்மையாரின் சூக்ஷும சமாதி இருக்கும் 2] திருவாலங்காடு சிவன் கோவில், அதன் அருகே உள்ள 3] காளிகோவில், 4] முஞ்சிகேச மகரிஷி ஜீவசமாதி.
பத்மாவதி தாயார் பிறந்த வனம், பாலாஜி பத்மாவதி தாயாரின் கரம் பிடித்த வனம், உடைவாள் ஏந்தி திருமண காப்புடன் என்றும் நாரணன் நிற்கும் வனம், திருமலைக்கும் மூத்த வனம், திருமண தடையை நீக்குவதில் உலகின் சிறந்த ஒரே வனமான 5] நாரயணவனம் வேங்கடவன் கோவில் அதன் அருகிலேயே 6] சுரைக்காய் சித்தர் ஜீவசமாதி கோவில்.
பைரவர் மூலவராக இருப்பது, சிவன் சந்நிதிக்கு எதிரே ஹனுமார் கூப்பிய கரங்களோடு இருப்பது மேலும் அதிசய நீரூற்று னு பல சிறப்புகளை கொண்ட உலகின் ஒரே பைரவர் கோவிலான 7] ராமகிரி பைரவர் கோவில்
மச்சாவதார கோலத்தில் பெருமாள் சுயம்புவாக இருக்கும் உலகின் ஒரே கோவிலான 8] நாகலாபுரம் வேதநாராயண பெருமாள் கோவில்
சிவன் பள்ளிகொண்ட கோலத்தில் அருள்பாலிக்கும் உலகின் ஒரே கோவிலான 9] சுருட்டப்பள்ளி சிவன் கோவில் நிறைவாக 10] திருமழிசை சிவன் கோவில் என
நாம் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் மிக பழமை வாய்ந்த பல அபூர்வ, அதிசய கோவில்களை தரிசிக்க போகிறோம்.
பள்ளிகொண்ட கோலத்தில் சிவன், சுயம்புவாக மீன் வடிவில் பெருமாள், அதிசய நீரூற்றோடு கூடிய விசேஷமான பைரவர் கோவில் என நீங்க இந்த யாத்திரையில் பார்க்கும் அனைத்து கோவில்களும் மிக, மிக அபூர்வமான ஷேத்ரங்கள். உலகில் இதுபோல் இன்னொரு கோவில் இல்லை என்று சொல்லும் அளவு அனைத்துமே
அபூர்வமான, விசேஷமான கோவில்கள்.
வரும் February 16 தேய்பிறை அஷ்டமி வருவதால் அன்று ராமகிரி பைரவரை தரிசனம் செய்வது மிக, மிக விசேஷம் பொருந்தியது.
இத்தகைய சிறப்பு பொருந்திய யாத்திரையில் பங்கு கொள்ளும் வாய்ப்பு சர்வ சாதாரணமாக அனைவருக்கும் கிடைத்து விடாது.
பித்ருக்களின் அனுக்ரஹம், குலதெய்வத்தின் ஆசி இந்த இரண்டும் முழுமையாக பெற்றவர்களுக்கே இதுபோன்ற ஒரு சிறப்பான ஆன்மீக யாத்திரையில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
நல் ஆரியரே இங்கு வாரீர், ஆனந்த கூத்தரே இங்கு வாரீர் என்னும் அருட்பிரகாச வள்ளலாரின் வாக்கிற்கிணங்க.
அத்தகைய புண்ணியம் செய்தவர்களை இந்த சிறப்பு யாத்திரைக்கு அடியேன் அழைக்கிறேன்.
காலை 7 மணிக்கு ஆரம்பம் ஆகும் இந்த புனித யாத்திரை இரவு 9 மணிக்கு நிறைவு பெறும்.
பஸ்ஸில் எங்களுக்கு முன் சீட் அல்லது மிடில் சீட் வேண்டும் என விரும்புவோர் அட்வான்ஸ் புக்கிங் செய்து கொள்ள வேண்டும்.
வரும் February 16 ஞாயிற்றுக்கிழமை
செய்யப்போகும் இந்த யாத்திரைக்கான பிக் அப் பாயிண்ட்கள் மொத்தம் 4 அவை
1] ஆலந்தூர் மெட்ரோ
2] அசோக் பில்லர்
3] கோயம்பேடு
4] மதுரவாயல்
2] அசோக் பில்லர்
3] கோயம்பேடு
4] மதுரவாயல்
முதல் பிக் அப் பாயிண்டான ஆலந்தூர் மெட்ரோ மற்றும் இரண்டாம் பிக் அப் பாயிண்டான அசோக் நகர் இரண்டு இடங்களுக்கும் காலை 7 மணியளவில் வரவேண்டும்.
கோயம்பேடு மற்றும் மதுரவாயல் காலை 7.30 மணிக்கு வரவேண்டும்.
காலை உணவு மதுரவாயலில் உள்ள நம்மவீடு வசந்த பவன் ஹோட்டலில்.
போகவர 350 கிலோமீட்டர் AC பஸ் பயணம், 3 வேளையுணவு, டீ, காபி, ஸ்நாக்ஸ் மற்றும் தரிசனம் என அணைத்தும் சேர்த்து ஒரு நபருக்கு 1500 மட்டுமே.
இந்த யாத்திரைக்கு வர விரும்புபவர்கள் உங்களின் பெயர், பிக் அப் பாயிண்ட், வரும் நபர்களின் எண்ணிக்கை முதலான விவரங்களை 8838886460 என்னும் எண்ணிற்கு மெசேஜ் செய்யவும்.
ஹரிகேசா டிராவல்ஸ்- டோர் நம்பர் 30, தில்லை கங்கா நகர் 26 வது தெரு, நங்கநல்லூர்
ஓம் நமசிவாய
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment