சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம். இப்படிப்பட்ட மகா சிவராத்திரி தினம் இந்த ஆண்டு 21 பிப்ரவரி 2020-ல் வருகிறது.
புராணங்கள்
புராணங்கள்
மகா சிவராத்திரி மகிமை நிறைந்தது. அன்னை அம்பிகைக்கு நவராத்திரி ஒன்பது நாள் கொண்டாட்டம். அப்பன் சிவபெருமானுக்கு ஒரே ராத்திரி அது சிவராத்திரி. கருட புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அருணாசல புராணம், சிவராத்திரி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் சிவராத்திரியின் மகிமைகளைப் பற்றிப் பலவாறாகக் கூறுகின்றன. சிவராத்திரி நாளில் சிவ ஆலயம் சென்றால் ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும். மாதந்தோறும் சிவராத்திரி உண்டு என்றாலும் மாசி மாதத்தில் வருவதே மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. சிவராத்திரியன்று தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள். சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மகா விஷ்ணு, மகாலட்சுமியையும் சக்கர ஆயுதத்தையும் பெற்றார். பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமையை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்வரங்களைப் பெற்றார்கள் என புராணங்கள் சொல்கின்றன.
சிவராத்திரியின் புராண கதை
பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார். இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்தார். வழிபாட்டின் முடிவில் அம்பிகை சிவனை வணங்கி வேண்டிக்கொண்டார். தான் பூஜித்த இந்த இரவை, ‘சிவ ராத்திரி’ என்று கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார். அப்படிப்பட்ட உன்னத நாள் தான் தேவர்களாலும், மனிதர்களாலும் இன்றும் சிவராத்திரி என்ற பெயரிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
சம்பவங்கள்
சிவராத்திரி நாளில் பல முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள் ளதாக புராணங்கள் கூறுகின்றன. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த போது பொங்கி வந்த ஆலகால விஷம் மண்ணுலக மக்களை பாதிக்கக் கூடாது என்று எண்ணிய சிவபெருமான், ஆலகால விஷத்தினைத் தனது கண்டத்தினுள் தாங்கி நீலகண்டனாக மாறி உலகத்தை அழிவில் இருந்து காத்தது இந்த சிவராத்திரி நாளில்தான். அன்னை உமாதேவி ஈசனின் கண்ணை மூடியதால் விளைந்த குழப்பத்தை நீக்கிக்கொள்ள விரதமிருந்து பேறுபெற்றதும் இந்த நாளில்தான். சிவனின் இடபாகத்தினை அன்னை பார்வதி பெற்ற தினம் இந்த நாள்தான். சிவனாரின் திருவடி மற்றும் திருமுடி காணப் புறப்பட்ட திருமாலுக்கும், பிரம்மதேவருக்கும் பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான், லிங்கோத்பவராக பெரும் ஒளிப்பிழம்பாகத் தோன்றி காட்சி அளித்ததும் மகாசிவராத்திரித் திருநாளில்தான். அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் தனது கண்ணினை அளித்து ஈசனிடம் மோட்சம் பெற்றதும் இந்த நாளில்தான். பிரம்மா தனது படைப்புத் தொழிலை தொடங்கியது இந்த நாளில்தான். இந்திரன் தேவலோக அதிபதியாக மாறியதும் இந்த நாளில் தான். குபேரன் செல்வத்தின் அதிபதி யான நாளும் இந்த நாள்தான். கண்ணப்ப நயினார் சிவபெருமானுக்காக தனது கண்களை தானமாக அளித்ததும் இந்த நாள்தான். சிவபெருமான் தனது பக்தன் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்த தினம் சிவராத்திரி.
சிவராத்திரியின் சூட்சமம்
சிவ ராத்திரி தினத்தன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் காலம் வரை சிவ பெருமானை பூஜை செய்து வழிபடுபவர் களுக்கு அனைத்து வித பாக்கியங்களும் தந்து, இறுதியில் மோட்சம் தர வேண்டும் என மகேசனை உமா மகேஸ்வரி வேண்டிக்கொண்டாள். அதன்படி சிவராத்திரி தினத்தில் யாரெல்லாம் சிவ பெருமானை நினைத்து வழிபடு கிறார்களோ அவர் கள் அனைவருக்கும் அனைத்து இன்னல் களும் நீங்கி மோட்சம் கிட்ட வேண்டும் என சிவ பெருமானிடம் வரம் பெற்றார் என்பது ஐதீகம்.
மோட்சம் பெற்ற வேடன்
ஒரு வேடன் காட்டில் வேட்டையாட சென்றிருந்தான். அன்றைய தினம் பல முயற்சிகள் செய்தும், பல இடங்களில் அலைந்து திரிந்தும் எந்த ஒரு விலங்கையும் வேட்டையாட முடியவில்லை. சூரியன் மறையக்கூடிய நேரம் வந்தது. அப்போது ஒரு புலி அவன ருகே வந்துவிட்டது. பயந்து போன அவன் அருகே இருந்த ஒரு வில்வ மரத் தில் ஏறிக்கொண்டான். புலியோ அவனை தின்றுவிட வேண்டும் என்ற ஆவலில் வேடன் இருந்த வில்வ மரத்தை சுற்றி சுற்றி வந்தது. சூரியன் மறைந்து இருண் டது. ஆனால் புலி மரத்தை விட்டு நகலவில்லை. தூக் கம் காரணமாக கண் அயர்ந்து கீழே விழுந்துவிட்டால், புலிக்கு இரையாகி விடுவோமே என்ற பயத்தில், மரத்தில் இருந்து ஒவ்வொரு இலையாக பிடுங்கி கீழே போட்டுக்கொண்டே இருந்தான். அவனுக்கே தெரியாமல் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது அந்த வில்வ இலைகள் விழுந்து அது வில்வ அர்ச்சனையாக மாறியிருந்தது.சிவ ராத்திரியாக அமைந்திருந்த அன்றைய தினம் இரவு முழுவதும் அவனுக்கு தெரி யாமலேயே, கொஞ்சம் கூட தூங் காமல் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச் சனை செய்ததால், அந்த வேடனுக்கு ஈசன் முக்தி அளித்து மோட்சத்தை அருளினார் என்கிறது புராணக்கதை.
சிறப்புகள்
மனதை கட்டுப்படுத்தும் மகாவிரதம், மகா சிவராத்திரி விரதம். ஆகவே, மகா சிவராத்திரியை கொண்டாடத் தேவையில்லை. பக்தியுடன் அனுஷ்டிக்க வேண்டும். மகா சிவராத்திரி. இந்த நாளில் உபவாசம் இருக்கவேண்டும். அதாவது சாப்பிடாமல் விரதம் மேற் கொள்ளவேண்டும். கண்விழிக்க வேண் டும். உபவாசத்துடன், கண்விழித்து, ஈசனை நினைந்து உருகி வழிபடவேண்டும். சிவ ராத்திரி நாளில் விடிய விடிய நான்கு ஜாமங் களிலும், நான்கு கால பூஜை நடத்த வேண்டும். வாசனை மலர், அலங் காரத்தை விடவும், வில்வ அர்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது. கோவிலுக்கு சென்று நான்கு ஜாம பூஜைகளில் பங்கேற்க முடியாதவர்கள் இரவு வீட் டிலேயே நான்கு ஜாமங் களிலும் நான்கு கால பூஜையை முறைப்படி செய்யலாம். வீட்டில் பூஜை செய்பவர்கள், பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய, சிவாய நம என வார்த்தைகளை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.
வழிபடும் முறை
நான்கு கால பூஜைக்கு முன்பாக நட ராஜரையும், பிரதோஷ நாயகரான நந்தியம் பெருமானையும் வழிபட வேண் டும். முதல் ஜாமத்தில் சோமஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் ஜாமத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் ஜாமத்தில் ரிஷபாரூட மூர்த்தி (சந்திரசேகரர்)யையும் வழிபட வேண்டும். கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவ புராணம், திருவிளையாடல் கதைகள், அறு பத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞான நூல்களைப் படிப்பது புண்ணியம் தரும். மறுநாள் அதிகாலையில் குளித்து விட்டு இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வணங்க வேண்டும். ஏழை எளிய வர்களுக்கு தானம் செய்து விட்டு சாப்பிட வேண்டும்.

No comments:
Post a Comment